பயாலஜிகலா பிறக்கலையா? 30 நொடியில் மோடி அம்மாவை அவமானப்படுத்திட்டாரே! சீனுக்குள் வந்த காயத்ரி ரகுராம்
சென்னை: தான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டேன் என்று என பேசி தன்னை 'கடவுளின் அவதாரம்' என்று வெளிப்படையாக மோடி சொல்லிக் கொள்கிறார் எனவும், அவர் தனது தாயை 30 வினாடிகளில் அவமானப்படுத்திவிட்டதாக நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
உலக அளவில் மிக பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் 18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

அடுத்ததாக ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நான்கு கட்டங்களாக 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி: ஒடிசா தேர்தல்: இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில் மூன்றாவது நான்காவது கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. இதை அடுத்து ஒடிசாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு வாரங்களில் மூன்று முறை அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார். பாஜக சார்பில் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் அங்கே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பயலாஜிகலாக பிறக்கவில்லை: இந்நிலையில் செய்தி நிறுவனங்கள் பலவற்றுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேர்காணல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஒடிஸாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரதமர் மோடி, நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.. நான் மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது அந்த பரமாத்மா தான்.
கடவுள் அனுப்பியுள்ளார்: "ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்" என பேசியிருந்தார். பிரதமர் இந்த பேச்சினை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பிரதமர் மோடி கடைசி நேரத்தில் பிரதமர் மத அரசியலை கையில் எடுத்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.
காயத்ரி ரகுராம்: இந்நிலையில் பிரதமரின் பேச்சை முன்னாள் பாஜக நிர்வாகியும், தற்போது அதிமுகவில் இணைந்து மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கும் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில்,""நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, ஆனால் நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டேன் என்று நான் நம்புகிறேன்" தன்னை 'கடவுளின் அவதாரம்' என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்கிறார்.
தாய்க்கு அவமானம்: அவர் தனது தாயை 30 வினாடிகளில் அவமானப்படுத்தியுள்ளார். அனைத்தும் அதிகாரத்திற்காகத் தான்.. தன்னை காசி விஸ்வநாதரை விட பெரிய ஆண்டவனாக நினைக்கிறார் பிரதமர் மோடி, இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் வாரணாசியில் அவர் வெல்லக் கூடாது. மாறாக இமயமலையில் அமர்ந்து தன்னையே கடவுளாக நினைத்து கற்பனை செய்து கொண்டு தியானம் செய்ய வைக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications