ரூ.500 கோடி கேட்ட திமுக.. “4 ஆடுதான் இருக்குன்னு சொல்லுவாரு! அண்ணாமலையை விட்றாதீங்க” - காயத்ரி
சென்னை: திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சொத்துப் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைடிடம் 500 கோடி ரூபாய் இழப்பீடு திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவோம் என்றும் பல மாதங்களாக பேசி வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஒரு பிரசெண்டேசனை வெளியிட்டார். ஆனால், அது ஊழல் பட்டியல் இல்லை என்றும் திமுகவினரின் சொத்துப் பட்டியலையே அண்ணாமலை வெளியிட்டு உள்ளார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

அண்ணாமலை வெளியிட்ட இந்த பட்டியல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் அதில் பல்வேறு தவறான தகவல் இருப்பதாக கூறி விமர்சனங்கள் எழுந்துள்ளன. திமுகவுக்கு எதிராக அண்ணாமலை எடுத்த ஆயுதம் அவருக்கு எதிராகவே தற்போது திரும்பி உள்ளது. ஆம், திமுக நிர்வாகிகள் மீதான அவதூறான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
"தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் நீங்களும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரைக் கலங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள். DMK FILES என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, அவதூறான, ஆதாரமற்ற, கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளீர்கள்." என்று தெரிவித்து உள்ளார்.
கடைசியாக, "திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது" என்று குறிப்பிட்டு உள்ள ஆர்.எஸ்.பாரதி, "உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும்.
இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும்.

எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, "பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பொய்க்குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ளும், அதற்குரிய வழக்குகள் திமுக தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் சட்டத்துறையால் தொடரப்படும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
திமுக, அண்ணாமலையை விட்டாதிங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள்.. அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications