பாஜக லிங்க் இருக்கு.. யார் அந்த ஆடு? கருக்கா வினோத் வக்கீல் எந்த கட்சி.. பாயிண்டை பிடித்த காயத்ரி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் தலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜக நிர்வாகி என்ற குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் கூறியதை வைத்தே காயத்ரி ரகுராம் புதிய சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்.
நேற்று பாஜக ட்விட்டரில் வெளியிட்டு இருந்த பதிவில், "ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார்.

அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது." என்று குறிப்பிட்டு இருந்தது.
இதனை ரீட்வீட் செய்த பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், "அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது."- தமிழ்நாடு பாஜக. ஜாமீன் எடுத்த இசக்கிபாண்டி மற்றும் நிசோக், வழக்கறிஞர் முத்தமிழ் செல்வன் இன்று வரை பாஜக அவர்களுடன் தொடர்பில் இருப்பது போல் தெரிகிறது. நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தது போல் ஒவ்வொரு விவரத்தையும் சொல்கிறார்கள். அவர்களே பிடிபடுகிறார்கள்.

முத்துவேல் செல்வன் 2021 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்திருந்தால், இந்த சம்பவம் 2022 பிப் நடந்தது. இசக்கிபாண்டியன் அல்லது நிசோக் அல்லது வழக்கறிஞர் முத்தமிழ் செல்வன் கையெழுத்து எபிசோடைப் பற்றி உங்களுக்கு யார் சொன்னது? கருக்கா வினோத்துக்கு ஜாமீன் கையெழுத்திட்ட இசக்கிபாண்டி மற்றும் நிசோக், வழக்கறிஞரோ, பிஜேபியுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே இது போன்ற விவரங்களை கூற முடியும். மூவரில் யாரோ ஒருவர் இந்த தகவலை பாஜகவுக்கு கொடுத்திருக்க வேண்டும். யார் அந்த ஆடு?
என்றென்றும் பொய். தமிழக காவல்துறையை திறமையற்றவர் அல்லது முதல்வர் திறமையற்றவர் என்று குற்றம் சாட்ட முயற்சிக்கிறது பாஜக ஆனால் நிச்சயமாக பாஜகவின் வியூகம் சாத்தியமற்றது தமிழ்நாட்டில் பொய்களுடன் அடியெடுத்து வைக்க முடியாது. அடுத்து தாமரை சின்னம். ஆளுநரை ஆபத்தில் ஆழ்த்த தி.மு.க முட்டாள் அல்ல. தெற்கில் பிரபலமற்ற தாமரை சின்னத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். திமுகவில் தேசியவாதம் இல்லை என்று பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனாலும் இது போன்ற தாமரை சின்னத்திற்கு வழக்கு போடுவது யாராக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications