நம்பவே முடியலியே.. நல்லா உற்று பார்த்துட்டு.. சட்டுன்னு சொல்லுங்க இது யாருன்னு!
சென்னை: நெற்றியில் நாமம் போட்டு கையில் மயிலிறகுடன் மொட்டை தலையோடு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். தனது பத்தாண்டு கால வேண்டுதல் நிறைவேறியுள்ளதாக கூறி பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
நடன இயக்குநர் ரகுராம் மகள் காயத்ரி. சின்னத்திரையில் சீரியல் ஹீரோயினாக நடித்தார். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக.. 'சார்லி சாப்ளின்' படத்தில் நடித்தார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து, ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வானம் போன்ற பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதுதவிர 'யாதுமாகி நின்றாய்' என்ற படத்தை இயக்கி நடித்தார்.

திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன காயத்திரி, நான்கு வருடத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இந்தியா திரும்பினார். விவாகரத்துக்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே காயத்திற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் நடன இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதை தொடர்ந்து,கந்தசாமி, மதராசபட்டினம், தலைவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார்.
2017ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டு மக்களிடம் பிரபலமானார். பிக் பாஸில் கலந்துக் கொள்ளும் முன்பே பாஜகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார் காயத்ரி ரகுராம். இதையடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் உட்கட்சி பிரச்னையால் பாஜகவிலிருந்து அவரை இடைநீக்கம் செய்தார் அண்ணாமலை. இதையடுத்து தான் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த காயத்ரி, அதையடுத்து அக்கட்சியையும், பிரமுகர்களையும் வெகுவாக விமர்சித்து வருகிறார்.
சினிமா தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்த அவர், சமீபத்தில் அரசியலில் இருந்து விலகினார். அதே வேகத்தில் விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தினசரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருவார் காயத்ரி ரகுராம்.
இதற்கிடையில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற அவர், அங்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மொட்டைத் தலையுடன், மயிலிறகு வைத்துள்ள புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஓம் நமோ நாராயணாய என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க தனது மொட்டை போட்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில், 'இது 10 ஆண்டு கால வேண்டுதல். என் வேண்டுதலை திருப்பதி ஏழுமலையான் நிறைவேற்றி தந்துள்ளார். அதற்காக என் முடியை காணிக்கை செலுத்தி விட்டேன். வேண்டுதலை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. தரிசனமும் நல்லபடியாக நடந்தது'' என்றார். அந்த வேண்டுதல் என்னெவென்று கேட்டபோது, 'சொந்த காரணங்களுக்கான வேண்டுதல். கொஞ்சம் பர்சனல்' என்று பதிலளித்தார்.
நெற்றியில் நாமம், கையில் மயிலிறகுடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டுள்ளார். பிரபலமான பெண் தன் நீளமான முடியை மொட்டையடித்துக் கொள்வதற்கு ஒரு தைரியம் வேண்டும், அது உங்களிடம் இருக்கிறது என அந்தப் படத்தை பாராட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். இன்னும் சிலர் இது ஒரிஜினல் புகைப்படம்தானா அல்லது கிராபிக்ஸ் ஆ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications