ஸ்கூட்டி, பஜாஜ், பல்சர், புல்லட்டுன்னு அத்தனையும் போகுதே.. சென்னை மாநகராட்சி செய்த தரமான 2 சம்பவம்
சென்னை: சென்னையில் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை போலீசார் மொத்தமாக அள்ளிச் சென்றனர். ஸ்கூட்டி முதல் புல்லட் வரை சாலையில் நின்ற எல்லா வாகனங்களையும் தூக்கி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சூளைமேடு சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நடைமேடைகளில் பாதசாரிகள் யாருமே போக முடியாது.. ஏனெனில் பிளாட்பார்ம் கடைகள் முழுமையாக பாதைகளை ஆக்கிரமித்து இருந்தன . இந்நிலையில் நேற்று சென்னை மாநகராட்சி, சென்னை நகர காவல்துறையுடன் கைகோர்த்து, பிளாட்பாரங்களில் இருந்த சுமார் 110 கடைகளை அகற்றியது.

லயோலா கல்லூரி சுரங்கப்பாதை முதல் அம்பா ஸ்கைவாக் வரை நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்த வந்த பிளாட்பார்ம் கடைகள் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதசாரிகளின் நடந்து செல்ல முடியாதபடி இருந்தன.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கிழக்கு மண்டல போலீசார், அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலை முழுவதும் கடைகள் காலி செய்யப்பட்டது. முன்னதாக, புதுப்பேட்டை, அண்ணாநகர், எழும்பூர் போன்ற இடங்களில் சாலையோரம், நடைமேடைகளில் இருந்த கடைகளை அகற்றினர்.
முன்னதாக கடந்த சில வாரம் முன்பு சென்னை முழுவதும் சாலையில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை போலீசார் அகற்றினர். சாலைகளில் தான் பலர் தங்களது வாகனங்களை சாலைகளில் நிரந்தரமாக நிறுத்தி வந்தனர்.அதனை எல்லாம் அதிரடியாக அகற்றினர். இதேபோல் சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை போன்ற பகுதிகளிலும் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. நேற்று நடந்தது போல் சென்னை முழுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் ஒருபுறம் எனில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி, ஹோண்டோ, பஜாஜ், பல்சர், புல்லட் என ஒரு வாகனதத்தையும் போலீஸ் விட்டு வைக்கவில்லை... டோவ் வண்டியில் ஏற்றி மலைபோல் குவிக்கப்பட்டன. அவை அனைத்தையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை காணாது அதிர்ந்து போனார்கள். போலீசார் தூக்கி சென்ற தகவலை கேட்டு போலீஸ் ஸ்டேசன் சென்றார்கள். அந்த வாகனங்கள் அனைத்திற்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications