பக்கா “ஸ்கெட்ச்”! ஒரே ஜம்ப்.. ஓபிஎஸ் பக்கம் சாயும் அதிமுக தராசு “முள்” - எடை குறையும் எடப்பாடி
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக முடிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தாவ தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சியின் இரட்டை தலைமை முறை ரத்து செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கு விசாரணை
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. இதனை தொடர்ந்து கடந்து17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.

உத்தரவு
ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

பழைய நிலை
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அணி தாவல்
இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த வழக்கு இருவர் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. நடப்பதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அணி தாவ தொடங்கி இருக்கின்றார்களாம்.

ஓபிஎஸுக்கு இருந்த பலம்
தமிழகத்தில் உள்ள 66 அதிமுக எம்.எல்.ஏக்களில் 63 எம்எல்ஏக்களும் 75 மாவட்ட செயலாளர்களின் 70 பேரும் 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2441 பேரும் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என சிதம்பரம் அதிமுக எம்.எல்.ஏவும் மாவட்ட செயலாளருமான பாண்டியன் மற்றும் புவனகிரி அதிமுக எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான கடந்த ஜூன் மாதம் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர்.

எடை குறையும் எடப்பாடி
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துவிட்டதால் அதன் பின்னர் நடந்த காட்சிகள் எல்லாம் மாறிவிட்டன. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு சமாதான தூதுவிட்டாலும் அவர் அதை ஏற்காத நிலையில், அவரோடு இருந்த ஆதராவாளருக்கு ரகசிய தூது விடுகிறது தேனி. இதனை ஏற்று சுமார் 10 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுக அலுவலகத்தில் பணிகளை ஓ.பன்னீர்செல்வம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் மேலும் அவர் பின்னால் பல பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வார்கள் என்று கூறப்பகிறது.
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தலில் வாக்களிக்க இனி கைரேகை - கருவிழி பயேமெட்ரிக் அடையாளம் கட்டாயம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications