தான செட்டில்மென்ட் யாருக்கு தரலாம்? எழுதி கொடுத்த சொத்தினை மீட்க முடியுமா? பத்திரம் ரத்து செய்ய வழி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 60 வயதில் தான செட்டில்மென்ட் எழுத வேண்டிய அவசியம் என்ன? இதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா? ஒருமுறை சொத்து எழுதி தந்துவிட்டால் அதனை திரும்ப பெற முடியாதா? செட்டில்மென்டை ரத்து செய்ய வழி? என்ற சந்தேகமும், குழப்பமும் பலருக்கும் இருக்கலாம். இதுகுறித்து முழுமையான விளக்கத்தை பெயிரா தலைவர் வெளியிட்டிருக்கிறார்.. இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடியே உள்ளன.. இதில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள.. தங்களது வாரிசுகளுக்கு செட்டில் மென்ட் பத்திரம் எழுதி தந்துவிடும் சூழலில், வாரிசுகளும் தாய்-தகப்பனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

Gift Deed property document gift settlement

இதன் காரணமாக, சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், தங்களது மாவட்ட கலெக்டர்களிடம், பெற்றோர்கள் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், 3 மாதங்களுக்கு முன்பு, சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தது.

சொத்துக்கள் பதிவு

அதன்படி, "சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதிகொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும்" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

கடந்த மாதம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பேட்டி ஒன்றில் கூறும்போது, "குடும்ப சூழல் காரணமாக 60 வயதில் தான செட்டில்மென்ட் எழுத வேண்டிய அவசியம் வருகிறது.. தங்களுடைய தேவைகளையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற்ற பிள்ளைகள் கவனித்து கொள்வார்கள் என்ற அடிப்படையில்தான், தான செட்டில்மென்ட் எழுதி வைக்கப்படுகிறது..

2 வழிகளில் ரத்து செய்யலாம்

ஆனால், தான செட்டில்மென்ட் எழுதி வைத்த உடனேயே, அதன் அனுபவமோ, ஆவணமோ அந்த தான செட்டில்மென்ட் எழுதி வாங்குபவர்களுக்கு வந்தாலும், மூத்த குடிமக்களை அவர்கள் கவனிக்காமல் இருந்தாலோ, அல்லது உணவு, உபசரிப்பு, பராமரிப்பு செய்யாமல் இருந்தாலோ, தான செட்டில்மென்ட் எழுதியவர் கோட்டாட்சியரிடம் புகார் தரலாம்.

அந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எழுதி கொடுத்த தான செட்டில்மென்ட்டையே ரத்து செய்யக்கூடிய அதிகாரம், கோட்டாட்சியருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் உள்ளது.

கோட்ட நீதிபதி, மாவட்ட நீதிபதி என்ற அந்தஸ்தில் இவர்கள் உள்ளதால், இந்த தான செட்டில்மென்ட்டை ரத்து செய்யக்கூடிய அதிகாரமும் இவர்களுக்கு இருக்கிறது. அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு, எழுதி கொடுக்கப்பட்டுள்ள தான ஆவணத்தை ரத்து செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்" என்று தெரிவித்திருந்தார்.

தான செட்டில்மென்ட் என்பது என்ன

இந்நிலையில், தான செட்டில்மென்ட் பத்திரம் குறித்து மீண்டும் ஒரு தெளிவான விளக்கத்தை பெயிரா பதிவிட்டுள்ளது.. தான செட்டில்மென்ட்டை ஒருமுறை தந்தால் திரும்ப வாங்க முடியாதா? என்பது குறித்தும் தெரிவித்துள்ளது.
"தான செட்டில்மென்ட் என்பது ஒரு சொத்து உரிமையாளரால், தன் சொத்தை வாழ்நாள் இருக்கும்போதே, வேறு ஒருவர் பெயருக்கு தொகை பெறாமல் ( இலவசமாக) மாற்றிக் கொடுக்கும் ஒரு சட்ட ஆவணமாகும். இது ஒரு பரிசுப் பத்திரம் போன்றது, ஆனால் அதற்கான தனி சட்ட நடைமுறை உள்ளது.

இதன் வழியாக சொத்துக்களை பிள்ளைகளுக்கு மனைவி / கணவருக்கு, அண்ணன், தங்கை, உறவினர்கள், தன்னிச்சையான நபர் அல்லது அமைப்புக்கு தரலாம். சொத்து முழுமையாக தங்களது பெயரில் இருந்தாலே போதும். ஒரே உரிமையாளர் (அல்லது இணை உரிமையாளர்கள்) உள்ள சொத்துக்கு செய்யலாம். செயல் திறன் உள்ள நபர் (18 வயதுக்கு மேற்பட்ட மனநலம் சரியானவர்) செய்தால் அது செல்லும்.

தான செட்டில்மென்ட் செய்யும் நடைமுறை எப்படி?

1. சட்ட ஆலோசனை: முதலில் ஒரு வழக்கறிஞர் மூலமாக உங்கள் சொத்துக்கு தான செட்டில்மென்ட் செய்யலாமா என்று பார்க்க வேண்டும்.

2, செட்டில்மென்ட் பத்திரம் தயாரிப்பு: விருப்பப்படி, பெறுநரின் பெயர், சொத்து விவரம், உரிமை ஏன் வழங்கப்படுகிறது என்பதையும் உள்ளடக்கிய செட்டில்மென்ட் டீடு தயாரிக்கப்படுகிறது.

3 . பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு: சொத்து உள்ள இடத்துக்கு உட்பட்ட சப்-ரெஜிஸ்ட்ரர் அலுவலகத்தில் செட்டில்மென்ட் பதிவாக வேண்டும்.

4. முத்திரைக் கட்டணம் (Stamp Duty): மதிப்பீட்டு ஆவணத்தின் அடிப்படையில், 1 சதவீதம் ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், அதிகப்படியாக 10 ஆயிரமும், 1 சதவீதம் ஸ்டாம்ப் டியூட்டி, அதிகப்படியாக 40 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படும். உறவினர்கள் அல்லாத நபர்களுக்கு கொடுத்தால், ஸ்டாம்ப் டியூட்டி 7 சதவீதமும், பதிவுக்கட்டணம் 2 சதவீதமும் இருக்க வேண்டும்.

மதிப்பீட்டுச் சான்றிதழின் அடிப்படையில் 1% ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம்
1% ஸ்டாம்ப் டியூட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

உறவினர்கள் அல்லாத நபர்களுக்கு கொடுத்தால், ஸ்டாம்ப் டியூட்டி அதிகமாகும் (சொத்து மதிப்பின் 4% வரை கூட இருக்கும்).

தேவைப்படும் ஆவணங்கள்:

பத்திரம் பதிவு செய்ய, சொத்து தொடர்பான சான்றுகள் (EC, பிளான், பட்டா) உரிமையாளர் மற்றும் பெறுபவரின் ஆதார், அடையாள ஆவணங்கள், புகைப்படம், கையொப்பம் போன்றவை தேவைப்படும். இந்த தான செட்டில்மென்ட்டை மகன், மகள், மனைவி, கணவர் போன்ற நேரடி உறவினர்களுக்குத் தரலாம். தந்தை, தாய், சகோதரர், சகோதரி போன்ற உறவுகளுக்கும் தரலாம். சிலர் சமூக அமைப்புகள், கோவில்கள், அறக்கட்டளைகளுக்கும் சொத்தை தானமாக கொடுப்பதுண்டு.

தான செட்டில்மென்ட் மாற்ற முடியுமா?

ஒரு முறைக்கு மேல் அன்ரிவோகபிள் செட்டில்மென்ட் (மீளப்பெற முடியாத பத்திரம்) ஆக பதிவு செய்தால், அதை உரிமையாளர் திரும்பப் பெற முடியாது. எனினும், ரிவோகபிள் செட்டில்மென்ட் (மீளப்பெறக்கூடியதாக வகுக்கப்பட்டால்): உரிமையாளர் அதை செல்லாது என அறிவிக்கலாம், அதற்கான வழிமுறையால் திரும்பப் பெறலாம்.

ஆனால் பெரும்பாலான செட்டில்மென்ட் பத்திரங்கள் திரும்பப்பெற முடியாதவையாக தான் செய்யப்படுகின்றன. ஏனெனில் பெறுபவருக்கு உறுதியான உரிமையை வழங்கவே இதற்காகப் பதிவு செய்கிறோம்.

தான செட்டில்மென்டை ரத்து செய்ய வழி

பத்திரத்தில் "revocable" என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே, சட்டரீதியான அறிக்கை மற்றும் வழிகாட்டியுடன் உரிமையாளர் செட்டில்மென்ட்டை ரத்து செய்யலாம். இல்லையேல், ரத்து செய்ய பெறுபவர் ஒப்புதல் தேவையாகும்.. இல்லையெனில், நீதிமன்ற வழக்கின் மூலம் மட்டுமே ரத்து செய்ய முடியும்.

தான செட்டில்மென்ட் செய்யும்போது, ஒருமுறை செய்துவிட்டால் உரிமையாளர் அந்த சொத்துக்கு உரிமை இழக்கிறார்.. வாங்கும் நபர் எதிர்மறையாக நடந்தால், உரிமையாளர் பின்பு மாற்ற முடியாமல் ஏமாற்றப்பட வாய்ப்பு. ஆதலால், நம்பகமான நபருக்கு மட்டும் செய்ய வேண்டும். பத்திரத்தில் தேவையான நிபந்தனைகளை எழுதி வைத்தால் பாதுகாப்பாக இருக்கும். (உதாரணம்: உயிரோடு இருக்கும் வரை வசிக்க அனுமதி, பின்பு மாற்றம் செய்யக் கூடாது எனவும்)

தான செட்டில்மென்ட் என்பது ஒரு சொத்தை மூன்றாவது நபருக்கு தன்னிச்சையாக, சட்டப்படி பாதுகாப்பாக மாற்றும் நெறிமுறை.. உரிமையாளருக்கு உண்மையாக நம்பிக்கை உள்ள நபருக்கே செய்ய வேண்டும். ஒருமுறை பதிவு செய்த பின் அதை திரும்பப் பெறுவது கடினம் என்பதால், இதை செய்வதற்கான முடிவை சட்ட ஆலோசனை எடுத்து, நன்கு யோசித்த பிறகே எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+