Plus 2 Exam results 2026: பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் ஈரோடுதான் டாப்!
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன் அறிவித்தார். இந்த தேர்வில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடந்தது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டது. இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தில் வெளியானது. அதில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.19 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் மாணவர்களின் தேர்ச்சியை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 3.82 சதவீதம் அதிகம். தமிழகத்தில் அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 98.87% பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதம், 3ஆவது இடத்தில் குமரி மாவட்டத்தில் 97.63 சதவீதமும் நெல்லை 97.54 சதவீதமும் திருச்சி 97.50 சதவீதமும் பெற்று முதல் 5 இடங்களை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications