மோடிக்கு ஆரம்பமே சிக்கல்! இந்த ஒரு கேள்விக்குத்தான் பதிலே வரல! நாயுடு, நிதிஷ் கூட்டாக வைத்த செக்
சென்னை: சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நிலையில் அவருடன் முழு அமைச்சரவையும் பதவி ஏற்றுள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. நேற்று 3வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பொறுப்பேற்றனர் .
முழு அமைச்சரவை: நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. முழு அமைச்சர்களும் பதவியேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முழு அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. முழு அமைச்சர்களின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது.
ஸ்பீக்கர் யார்?: இந்த நிலையில் லோக்சபா ஸ்பீக்கர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா சபாநாயகர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனாரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் உள்ளது.
முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம், குதிரை பேரம், எம்பிக்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சபாநாயகர் பதவி முக்கியமானதாக மாறும்.
நாயுடு திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர்.
கடந்த 10 வருடங்களில் பாஜக பல அரசுகளை கவிழ்த்து இருக்கிறது. பல மாநில அரசுகளை கவிழ்த்து உள்ளது. பல மாநில கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது.
இந்த நிலையில் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி மாற்று கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர்களை தகுதி நீக்கும் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதில் கோர்ட் கூட தலையிட முடியாது. உதாரணமாக எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கான ஆதரவை தெலுங்கு தேசம் வாபஸ் வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது தெலுங்கு தேசம் எம்பிக்களை பாஜக பிரித்து தங்கள் பக்கம் இழுக்கலாம் . இதனால் தெலுங்கு தேசம் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவிற்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் தெலுங்கு தேசத்து எம்பி சபாநாயகராக இருந்தால்.. அவர் அணி மாறி வாக்களிக்கும் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அதுவே பாஜக எம்பியாக இருந்தால்.. தெலுங்கு தேசம் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்து அணி மாறும் எம்பிக்களுக்கு ஆதரவாக கூட செயல்படுவார்.
இதேதான் நிதிஷ் குமார் கட்சியிலும். இதன் காரணமாகவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் இரண்டு பேருமே சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டுள்ளனர். என்ன நடந்தாலும் எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டு இருக்கின்றனர்.
பெரிய அமைச்சரவை எல்லாம் வேண்டாம்.. எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் முக்கியமாக சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications