தமிழ் மாநில காங்கிரசுக்கு 6 சீட்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டி! லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ்
சென்னை: அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன.
ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

12 தொகுதிகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உள்ளதாக கூறப்பட்டது. சைக்கிள் சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் 12 தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ஜிகே வாசன்.

தேமுதிக விவகாரம்
ஆனால், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருக்குமா இல்லையா என்ற ஒரு இழுபறி நிலை இருந்ததால் தமிழ் மாநில காங்கிரசுக்கு அத்தனை தொகுதிகள் ஒதுக்க அதிமுக யோசித்து வந்தது. இப்போது தேமுதிக இந்த கூட்டணியில் இல்லை.

இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, இன்று இரவு சென்னையில் இரவு எடப்பாடி பழனிச்சாமியை வாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய வாசன், 6 தொகுதிகளிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்படும் என்று அறிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரசுக்கு 6
தமிழ் மாநில காங்கிரசுக்கு, திருவிக நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி மற்றும் கிள்ளியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே லால்குடியில் அதிமுக தனது வேட்பாளராக ராஜாராம் என்பவரை, அறிவித்து விட்டது. இப்போது தமிழ் மாநில காங்கிரசுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியுள்ளதால், தனது வேட்பாளரை வாபஸ் பெற உள்ளது. இதனால் லால்குடி அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications