Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டலூர் + மண்ணிவாக்கம் + மலையம்பாக்கம்.. சென்னையில் புதுசா 3 வருதாமே? தலைநிமிருது தலைநகரம்.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சியானது சென்னையை நிமிர வைத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், சென்னை நகரமே ஆச்சரியப்படத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.. குறிப்பாக, சென்னை மட்டுமல்லாமல், சென்னையின் புறநகர் பகுதிகளில் ஐ.டி. கம்பெனிகளின் எண்ணிக்கை பெருகியபடியே வருகிறது.

Glad Announcement from Mannivakkam, Vandalur and what are the 3 more technology parks are coming up in chennai

சென்னை நகரம்: இதனால், சென்னை நகரத்திற்குள் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டது. அதனால், இதனை சரிகட்டும் நோக்கில், ஓஆர்ஆர் சாலை உருவாக்கப்பட்டிருந்தது.. இதன் காரணமாக, பல இடங்களில், வாகன நெரிசல் குறைந்து, பொது மக்கள் தகுந்த நேரத்தில் சென்று வரவும் உதவியாக அமைந்தது.

ஆனால், புறநகர் பகுதிகளில் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சியும் நாளுக்கு நாள் உயர்ந்தபடியே உள்ளது.. கடந்த 2000-ம் ஆண்டில்தான் டைடல் பார்க் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

அடையாளம்: சென்னையின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படும் டைடல் பார்க் OMR சாலையில் அமைந்திருக்கிறது.. 1,280,000 சதுரடியில் அமையப் பெற்றுள்ளது.. இது இந்தியாவின் சிங்கிள் பெரிய தொழில்நுட்ப பூங்கா ஆகும். 8 ஏக்கர் பரப்பளவில் உள்ள டைடல் பார்க் 13 அடுக்குகள் கொண்டது. டைடல் பார்க் துவங்கப்பட்ட ஆண்டிலிருந்தே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சியானது சென்னையை கலக்கி கொண்டிருக்கிறது.

மனித வளம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கல்லூரிகள் போன்றவையெல்லாம், இந்த துறையின் அதிவேக வளர்ச்சிக்கு வித்திட்டது என்றே சொல்லலாம். ஏனவேதான், பல முன்னணி நிறுவனங்களும் சென்னையில் தங்களது வளர்ச்சி மையத்தை அமைக்க முனைப்பு காட்டி வருகின்றன.

ஓஎம்ஆர்: ஏற்கனவே, ஓஎம்ஆர் ரோடு, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி போன்ற இடங்களில் ஏகப்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன.. இதைத்தவிர, மேலும் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனவாம். இதுகுறித்த கூடுதல் தகவல்தான் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் 5.33 ஏக்கர் நிலத்திலும், மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவிலும், மலையம்பாக்கம், வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறதாம்.. டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கியிருக்கிறதாம்..

பெருத்த நம்பிக்கை: இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் துரிதமாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் இன்னும் ஒன்றரை வருடத்துக்குள் கட்டி முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இந்த தொழில்நுட்ப பூங்காக்கள் திறக்கப்படும் பட்சத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் இன்னும் அதிக வளர்ச்சி அடைய இது உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+