Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு குஷி.. எல்லாமே தலைகீழாக திரும்புதே.. இனி "ஸ்பாட் ஆக்‌ஷன்".. வருகிறது தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளின் வளமான வாழ்க்கைக்காக, இன்னொரு அதிரடி ஏற்பாட்டை மத்திய அரசு செய்திருக்கிறது.. அது என்ன தெரியுமா?

விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அமல்படுத்தியிருக்கிறது.

Glad news for Farmers and A new app is being introduced to address farmers grievances by Tamil Nadu Government

குறிப்பாக, பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே துவங்கப்பட்ட திட்டமாகும். இந்த பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தில், விவசாயிகளுக்கு பண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாரத் ஆட்டா: ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோல, விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், "பாரத்' பிராண்ட் ஆட்டா, 'பாரத் ரைஸ் ' போன்றவை மலிவு விலையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்தவகையில் தமிழக அரசும் விவசாயிகளின் நலனில் பெரும் அக்கறை செலுத்தி வருகிறது.. வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டு வருவதால், இந்த குறைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறைந்த வாடகை: விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன... இந்த இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார்..

இந்த வரிசையில், விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காகவே புதிய செயலி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.. அதாவது, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

நெல் எடை: நெல் விளையும் மாவட்டங்களில், வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவங்கி, விவசாயிகள் எடுத்து வரும் நெல், எடை போட்டு வாங்கப்படுகிறது. இதற்காகவே மத்திய, மாநில அரசுகளின் சார்பில், 100 டன் எடை கொண்ட குவிண்டால் நெல்லுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையும் வழங்கப்பட்டு வருகிறது.

நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடமிருந்து புகார் பெற்று விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே, குறைதீர்க்கும் இந்த மொபைல் போன் செயலியை நுகர்பொருள் வாணிப கழகம் அறிமுகம் செய்திருக்கிறது... இந்த பணம், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

முறைகேடுகள்: ஆனாலும் இதில் சில முறைகேடுகள் நடப்பதாக தெரிகிறது.. குறிப்பாக, எடையை குறைத்து வாங்குவது, ஒரு மூட்டைக்கு கமிஷன் வாங்குவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்..

எனவே, பாதிக்கப்பட்டோர் சென்னையில் உள்ள வாணிப கழக அலுவலக கட்டுப்பாட்டு மையத்தின் எண்ணில் புகார்களை தரலாம்.. ஆனால், ஒரே சமயத்தில் நிறைய பேர் புகார் தரும்போது, இணைப்பு சரியாக கிடைப்பதில்லையாம்..

அதனால்தான், விவசாயிகளிடம் எப்போது வேண்டுமானாலும் புகார் தர வேண்டும் என்பதற்காகவும், அந்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் குறைதீர்க்கும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்..

சபாஷ்: இனிமேல் விவசாயிகள் இந்த செயலில் அனைத்து புகார்களையும் தரலாம்.. அதேபோல, நெல் வழங்குவதற்கான விபரங்களையும், இந்த செயலியில் பதிவு செய்யலாம்... அப்படி பதிவு செய்தால், நெல்லை எப்போது கொண்டுவர வேண்டும் என்ற விபரமும் தெரிவிக்கப்படுமாம்.. அந்தவகையில் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய இந்த மொபைல் போன் செயலி, விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+