பென்ஷன் பெறுவோர் வீட்டிலிருந்தே வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.. தவறினால் ஓய்வூதியம் கிடைக்காது
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு வங்கிக்கு செல்ல முடியாதவர்களுக்காக, வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பெறலாம்.. இதற்காக சில வழிமுறைகளை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது. இது பென்ஷன்தாரர்களுக்கு மிகுந்த பலனை தந்து வருகிறது. தற்போது நவம்பர் மாதம் என்பதால், வாழ்நாள் சான்றிதழை பென்ஷன்தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) என்பது, ஓய்வூதியதாரர் ஓய்வூதிய சலுகைகளை பெறத் தகுதியுடையவர் என்பதை உறுதிப்படுத்தும் ஆயுள் சான்று ஆவணமாகும். இது பயோமெட்ரிக் இயக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான ஆயுள் சான்றிதழாகும்.

ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதிய பணம் தவறாக பயன்படுத்தப்படுவதையும், மோசடிகளையும் தடுப்பதற்காக, ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சிகள் (PDAs) ஓய்வூதியத் தொகையை வரவு வைப்பதற்கு முன்பு இந்தச் சான்றிதழைச் சரிபார்ப்பது அரசினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் பெறுவோர் ஒவ்வொரு வருடம் நவம்பரிலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்..
இதில், 80 வயதுக்கு மேற்பட்ட அதிமூத்த குடிமக்களுக்கு, அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரைச் சமர்ப்பிக்கக் கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சமர்ப்பிக்க தவறினால் அவர்கள் ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும்.
பென்ஷன் பெறுவோருக்கு ஈசி
முன்பெல்லாம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு ஓய்வூதியதாரர்கள் வங்கி, ஈபிஎஃப்ஓ அலுவலகம் என்று நேரில் சென்று அலைய வேண்டியிருந்தது. ஆனால், இன்று வங்கிக்கோ, போஸ்ட் ஆபீசுக்கோ செல்லாமல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலேயே ஆயுள் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது சமர்ப்பிக்கலாம்.
ஆயுள் சான்றிதழுடன், ஓய்வூதிய விநியோகத்தை உறுதி செய்வதற்கு அடையாள சான்றிதழ், வயதினை உறுதி செய்ய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் அட்டை, குடியிருப்புச் சான்று, IFSC குறியீடு மற்றும் பாஸ்புக் நகல் உள்ளிட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான அறிவிப்பு மற்றும் ஓய்வூதியக் கட்டண ஆணை (PPO) எண் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருந்தது.. அதில், "நாடு முழுதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0-ஐ நவம்பர் 1 முதல் 30ம் தேதி வரை அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்த உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
தற்போது நவம்பர் மாதம் துவங்கியிருக்கும் நிலையில், ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க 3 விதமான எளிய வழிகள் செய்யப்பட்டுள்ளன.
வீட்டு வாசலிலேயே வாழ்நாள் சான்றிதழ்
முதலாவதாக, வீட்டு வாசலில் சேவை (Doorstep Banking) மூலம் ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
எனவே ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், PPO எண், ஓய்வூதிய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
இதற்கு, தங்கள் பகுதியிலுள்ள போஸ்ட்மேன் அல்லது போஸ்ட் ஆபீஸை தொடர்பு கொண்டு, வாழ்நாள் சான்றிதழ் வேண்டும் என்று சொன்னாலே போதும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஊழியர்கள், உங்கள்வீட்டு வாசலுக்கு வருவார்கள். இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
ஆன்லைனில் ஆயுள் சான்றிதழ்
அதேபோல https://jeevanpramaan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று ஆதாரை பயன்படுத்தி சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அல்லது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல இந்திய குடிமக்களுக்கான அரசு சேவைகளை வழங்கும் UMANG செயலியிலும், சான்றிதழை பெறலாம். இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் UMANG என்ற ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதில், 'Jeevan Pramaan' என்பதற்குள் நுழைந்து, 'Generate Life Certificate' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும்.. அனைத்து விவரங்களையும் பதிவிட்டு, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
ஆஃப்லைனில் பெறலாம்
ஆஃப்லைனில் அதாவது வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸுக்கு நேரடியாகவே சென்று சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பொதுச் சேவை மையத்திற்கு (CSC) நேரில் சென்றும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications