வடசென்னைக்கு வரப்பிரசாதம்.. பெரியார் அரசு மருத்துவமனை! கொளத்தூர் மக்கள் கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சி
சென்னை: வடசென்னை மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.. கொளத்தூரில் ரூ. 210 கோடியில் பிரமாண்ட அரசு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். அந்தவகையில், இன்று முதல் இந்த மருத்துவமனை, மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
சென்னையை பொறுத்தவரை, அடித்தட்டு மக்கள் அதிகமாக நம்பியிருப்பது, அரசு மருத்துவமனைகளைதான்.. அந்தவகையில், ஸ்டான்லி மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என 4 மிகப்பெரிய மருத்துவமனைகள் உள்ளன.

4 அரசு மருத்துவமனைகள்
எனினும், பிற மாவட்ட மக்களும் இந்த மருத்துவமனையை நாடி வருவதால், எந்நேரமும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. எனவே, வடசென்னையில் மேலும் ஒரு மருத்துவமனை வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து, வடசென்னையில் செயல்பட்டு வந்த சிறிய அளவிலான பெரியார் நகர் அரசு மருத்துவமனையை பெரிய மருத்துவமனையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன..
கொளத்தூர் பெரியார் நகர்
அந்த வகையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 1986ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. கடந்த 37 வருடங்களாக 100 படுக்கை வசதியுடன் சிறிய அளவில் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையை சீரமைத்து பெரிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படியே, பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வர் ஸ்டாலின் கடந்த 8.3.2023 அன்று 3 தளங்களுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட 2024 மார்ச் 7ம் தேதி அடிக்கல்லும் நாட்டினார்.
ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு வசதிகள்
மொத்தம் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனையின் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கங்கள், நவீன ரத்த வங்கி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
2ம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், 3ம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டு, 4ம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, 5ம் தளத்தில் இருதயவியல் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, 6வது ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
இப்படி தனியார் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு இந்த மருத்துவமனை முழுவதும் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இந்த மருத்துவமனை திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.. கொளத்தூரில் ரூ210 கோடியில் பிரமாண்ட அரசு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
அன்று சிறிய அளவில் செயல்பட்டு வந்த புறநகர் மருத்துவமனை, இன்று அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது, வடசென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனினும், இந்த மருத்துவமனைக்கு வந்துசெல்ல பஸ் வசதிகளை ஏற்படுத்தி தந்தால் உபயோகமாக இருக்கும் என்று அம்மக்கள் கேட்டு வருகிறார்கள். அதேபோல, மருத்துவமனைக்கு நிறைய வாகனங்களை நிறுத்துவதற்கு மிகப்பெரிய அளவில் மல்டி பார்க்கிங் வசதியும் தேவையாக இருப்பதாக சொல்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications