அரிசி கார்டுதாரர்களுக்கு ஹேப்பி.. ரேஷனில் தீபாவளிக்கு வந்த சர்ப்ரைஸ்.. பச்சரிசி இனி தாராளம்.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 - 35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12 - 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று குட்நியூஸ் வெளியான நிலையில், மற்றொரு மகிழ்ச்சி தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது. இது இல்லத்தரசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தீபாவளி பண்டிகை காரணமாக, ரேஷன் கடைகளில் பச்சரிசிக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, கார்டுதாரர்களின் தேவைக்கு ஏற்ப, பச்சரிசி வினியோகம் செய்யுமாறு, கடை ஊழியர்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டு உள்ளது.

Ration Ration Card Holders Rice

தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் இலவசமாக பச்சரிசி, புழுங்கல் அரிசி வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னுரிமை பிரிவுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோவும், அந்தியோதயா பிரிவுக்கு அதிகபட்சம் தலா, 35 கிலோவும்; முன்னுரிமையற்ற பிரிவுக்கு, 20 கிலோவும் வழங்கப்படுகிறது.

ரேஷன் கார்டுதாரர்கள்

அனைத்து கார்டுதாரர்களும் தங்களின் தேவைக்கு ஏற்ப பச்சரிசி, புழுங்கல் அரிசியாக வாங்கிக் கொள்ளலாம். மாதந்தோறும், 3.60 லட்சம் டன் அரிசி தேவை; இதில் சராசரியாக, 30 சதவீதம் பச்சரிசியும், மீதி புழுங்கல் அரிசியும் வழங்கப்படுகிறது... வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், பலரும் பச்சரிசி வாங்கி வருகின்றனர்.

தீபாவளி முடியும்வரை பச்சரிசிக்கான தேவை அதிகரித்தபடியே இருக்கும் என்பதால், கார்டுதாரர்களின் தேவைக்கு ஏற்ப பச்சரிசி வினியோகம் செய்யுமாறு, கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதேபோல, ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்கள், நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம் என்று உணவு துறை அறிவித்துள்ளது..

ரேஷனில் பச்சரிசி

இதுகுறித்த அறிவிப்பில், பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு, அரிசி கார்டுதாரர்கள் பயனடையும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் நவம்பர் மாதத்திற்கு உரிய அரிசியை மட்டும் இம்மாதமே பெற்றுக் கொள்ளலாம். அதாவது, இம்மாத ஒதுக்கீடான அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும், இதுவரை பெறாதவர்களும், நவ., மாதத்திற்கான ஒதுக்கீட்டை, இம்மாதத்திலேயே சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்த மாத அரிசியை, இம்மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பரில் தங்களுக்கு உரிய அரிசியை பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள்

இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களை கட்டாயமாக பட்டாசு வாங்குமாறு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுதும், தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் பட்டாசு கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இவைகளில் பெரும்பாலான கடைகளில், ரேஷன் கடை ஊழியர்களிடம், பட்டாசு விருப்பப்பட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு, 1,000 முதல், 6,000 ரூபாய் வரை, கட்டாயம் பட்டாசு வாங்க வேண்டும் என்று பண்டகசாலை அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்கிறார்களாம்.

போனஸ் தேவை

இது குறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களை, பட்டாசு வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவித்தாலும், லாபம் ஈட்டும் சங்கங்களில் மட்டுமே முழு போனஸ் வழங்கப்படுகிறது.

நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களின் ஊழியர்களுக்கு, 10 சதவீதம், 3,000, 2,500 ரூபாய் என, இஷ்டத்துக்கு போனஸ் தொகை வழங்கப்படுகிறது. சங்கங்களின் நஷ்டத்துக்கு அதிகாரிகள் தான் காரணம். எனவே, அனைத்து சங்கங்களின் ஊழியர்களுக்கும், ஒரே மாதிரியாக போனஸ் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+