சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குஷி.. இதைவிடுங்க, ரேஷன் அரிசியில் மாற்று? ரேசன் கடையில் கிளம்பிய மேட்டர்
சென்னை: ரேஷன் ஊழியர்கள் மிக முக்கிய கோரிக்கை ஒன்றினை விடுத்திருக்கிறார்கள்.. இதுகுறித்த நடவடிக்கையை, அதிகாரிகள் விரைந்து எடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
தமிழக ரேஷன் கடைகளில் மாதம், 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும், துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

மலிவு விலையில் இந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதால், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படுகின்றன.. அதேசமயம், ரேஷன்தாரர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் நிறைய அதிரடி அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அறிவிப்பு: நேற்றுகூட, ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது, ரேஷன் பொருட்களின் எடை மிககுறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனால்தான், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரிபார்க்க கூடிய மின்னணு தராசு எடுத்து செல்ல வேண்டும் எனவும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை இறக்கும்போது பொருட்கள் மறு எடையிட்டு நியாய விலை கடை பணியாளர்களிடம் ஒப்புதல் பெறப்படுகிறது என்பதை உறுதி செய்யுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள்: நியாய விலைக்கடைகளில் பொருட்களை இறக்கும்போது அவை மறு எடையிடப்பட்டு ரேஷன் கடை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது என்பதையும் உறுதி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பானது ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ரேஷன் ஊழியர்கள் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.
சாக்கு பைகள்: அதாவது, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 50 கிலோ சாக்கு பைகளில் அனுப்பி வைக்கிறது.. இதனால், மாதம் சராசரியாக, 60 லட்சம் சாக்கு பைகள் கிடைக்கின்றன.. ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் டெண்டர் வாயிலாக, சாக்கு பைகளை விற்கின்றன. இதனால், ஒரு பைக்கு, 20 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
இந்த வருவாயை கொண்டுதான், ரேஷன் கடை வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு சாக்கு பை வாயிலாக கிடைக்கும் வருவாய் என்பது மிக மிக முக்கிய பங்கினை வகித்து வருகிறது.
கோரிக்கை: இப்படியிருக்கும்போது, சாக்கு பைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அரிசி வழங்கப்பட்டு வருகிறதாம். ஆனால், இந்த பிளாஸ்டிக் பைகளில் அரிசி தரும்போது, அது எளிதில் கிழிந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல், 1 பிளாஸ்டிக் பை, வெறும் 3 ரூபாய்க்கு தான் விலை போகிறது. எனவே, வழக்கம்போல் சாக்கு பையிலேயே அரிசி அனுப்ப, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்களாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications