ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு.. மூன்றரை வருடத்தில் இத்தனை புதிய ரேசன் கடைகளா? தமிழக அரசு கலக்குதே
சென்னை: புதிய ரேஷன் கார்டுகள் எப்போது விநியோகிக்கப்படும் என்ற ஆர்வம் ரேஷன்தாரர்களிடம் ஏற்பட்டு வரும்நிலையில், ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படுவது குறித்து தமிழக அரசு நம்பிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது மதுரை மாவட்டத்துக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.. மொத்தம் 35,083 ரேஷன் கடைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.. அந்தவகையில், 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்கள் உள்ள நிலையில், 7 கோடிக்கும் அதிகமானோர் நேரடியாகவே பயன்பெற்று வருகின்றனர்.

விண்ணப்பங்கள்: எனினும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.. இத்தனை விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கண்டு அதிர்ந்துபோன அரசு அதிகாரிகள், அதற்கான முனைப்பில் இறங்கினார்கள். ஆனால் அதற்குள் எம்பி தேர்தல் நடைபெற்றதால், புதிய அட்டைகள் வழங்கும் பணியை நிறுத்த அரசு முடிவு செய்தது. தேர்தல் முடிந்ததும், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் மறுபடியும் தொடங்கியது.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், நேரடியாக வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரே வீட்டில் 2 2 ரேஷன் கார்டுகள் இருக்கின்றனவா? என்றெல்லாம் ஆய்வு மேற்கொண்டனர். இறுதியில், சரியான தகவல்கள் இல்லாத 1,28,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக உணவுப் பொருள் வழங்கல்துறை அறிவித்திருந்தனர்.
புதிய ரேஷன் கார்டுகள்: எனினும், சரியான முறையில் விண்ணப்பித்து இருந்த 1,54,500 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 6,640 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு மற்றொரு குட்நியூஸ் வழங்கியிருக்கிறது.
சட்டசபை கூட்டத்தில், அதிமுக பெரியபுள்ளான் செல்வம் பேசும்போது, மேலுார் தொகுதி கம்பூர் ஊராட்சி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அமைச்சர் அதிரடி: இதற்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளிக்கும்போது, "மதுரை மாவட்டம் மேலுார் கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட, கேசம்பட்டி தொடக்க கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில், பெரிய கற்பூரம்பட்டி முழு நேர ரேஷன் கடை, 567 கார்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், சின்ன கற்பூரம்பட்டியில், 282 கார்டுகள் உள்ளன. பகுதி நேர புதிய கடை பிரிக்கப்பட்ட பிறகு, தாய் கடையில், 285 கார்டுகள் மட்டுமே இருக்கும். தாய் கடைக்கும், புதிய கடை கோரும் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம், அரை கி.மீ., ஆகும்.
அரசு ஆணையின்படி, இரு கடைகள் இடையே, 1.50 கி.மீ., துாரமும், 500 கார்டுகளும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சின்ன கற்பூரம்பட்டியில் பகுதி நேர புதிய ரேஷன் கடை அமைக்க வழிவகை இல்லை. தற்போது தமிழகம் முழுதும், 34,793 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன..
புதிய கடைகள்: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அதாவது இந்த வருடம் நவம்பர் வரை, 544 முழு நேர கடைகள், 1,126 பகுதி நேர கடைகள் என, 1,670 ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன... வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மேலூர் தொகுதி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அமைச்சரின் இந்த அறிவிப்பானது மிகுந்த நம்பிக்கையை மதுரை மேலூர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வினியோகமும் செய்யப்படுகின்றன. சில இடங்களில், அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் கிளம்பியதையடுத்து, ரேஷன் பொருட்களின் தரத்தை, கார்டுதாரர்கள் தெரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு பொருளின் மாதிரியையும், கடைக்கு முன்பு, சிறிய பாத்திரங்களில் வைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்று, ரேஷன் ஊழியர்களுக்கு, அரசு உத்தரவிட்டிருந்தது..
நம்பிக்கை: காரணம், இப்படி தனித்தனியாக பொருட்களை பிரித்து வைத்து காட்சிப்படுத்துவதன் மூலம், அரிசி உட்பட அனைத்து பொருட்களின் தரத்தையும், கார்டுதாரர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications