ரேஷன் கார்டு வைத்துள்ளோருக்கு மகிழ்ச்சி.. ஆள் அனுப்பி ரேஷன் வாங்கறீங்களா? முதியோர்களுக்கு புது வசதி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இந்த புதிய வசதியானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பலன்களை பெற்று வருகின்றனர்.

இதற்காக அரசு வருடத்துக்கு 10,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. எனவேதான், ரேஷனில் நிலவும் முறைகேட்டை தடுக்க, ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்து உறுதி செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கள்ளச்சந்தை விற்பனை
ஆனாலும், ரேஷன் அரிசியை பலரும் கடத்தி, கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்கள். இதனால், ரேஷன்தாரர்களுக்குரிய பொருட்களை விநியோகிக்க முடிவதில்லை. எனவே, ரேஷன் கடத்தலை தடுக்கும் முயற்சியில், தமிழக எல்லைகளில் போலீசார் விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். இதைத்தவிர, ரேஷன் கடைகளில் திடீர் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இவைகளை தவிர, ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கான முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூத்த குடிமக்கள்
எனினும், பல்வேறு சமயங்களில் மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். அவர்கள் மட்டும், தங்களின் சார்பில் வேறு நபரை கடைக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில், அங்கீகார சான்று விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும் என்பது அடிப்படையான விதியாகும்.
ஆனால், அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்தபடி இருந்தன.. எனவேதான், "www.tnpds.gov.in" என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கும் வசதியை, உணவு துறை தற்போது புதிதாக துவக்கியிருக்கிறது.
புதிய வெப்சைட் - வசதிகள்
இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "இணையதள விண்ணப்பத்தில் மூத்த குடிமக்கள், தங்களின் சார்பில் அனுப்பும் நபரின் பெயர், உறவு முறை உள்ளிட்ட விபரங்களுடன், ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.. அதை சரிபார்த்து, அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள்.. நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினியில் பதிவாகும் என்பதால், குறித்த நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் இதனால் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications