அமித்ஷா சொல்வது என்ன? வாய் விட்ட மோடி.. இதோ வந்தாச்சு கெடு.. இன்னும் ஒரே வாரம்! விழிக்குது பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்திக்க உள்ள நிலையில், பாமகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டுள்ளார்.. இது பாமக தொண்டர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.. டாக்டர் ராமதாஸின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அமித்ஷா வரும்போது இப்படியொரு முடிவை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன? இதுகுறித்து சில காரணங்கள் கசிந்து வருகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து ஐக்கியமாகி வருகிறது பாமக. ஆனால், கடந்த எம்பி தேர்தலிலேயே கூட்டணி சலசலப்பு பாமகவுக்குள் வெடித்தது.

PMK Ramadoss Amit shah

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், பாமகவின் சில முக்கிய நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் அதிருப்திகள் கிளம்பின.. காரணம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக கொண்டுவந்தபோது, அதை பாஜக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில, இந்த கூட்டணியை சிலர் விரும்பவில்லை.

அதிருப்தியில் தொண்டர்கள்

வலிமை கூட்டணி: கடந்த முறை அதிமுகவுடன் வலிமையாக கூட்டணி வைத்தும்கூட, பாமகவால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எப்படி வெற்றி பெற முடியும்? என்பதே இந்த அதிருப்தியாளர்களின் சந்தேகமாக எழுந்தது.

சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காப்பது ஏன்? பாஜகவின் நிலைப்பாடு தெரியாதபட்சத்தில், எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது? பாஜகவுடன் கூட்டணி வைப்பதால், மேல்மட்ட தலைவர்கள் திருப்தியடைந்து கொள்ளலாமே தவிர, அடிமட்ட தொண்டர்களை திருப்திப்படுத்துவது கடினம்..

தேர்தல் வேலைகளில் முழுமனதுடன் எப்படி வேலை செய்வார்கள்? என்றெல்லாம் கடந்த தேர்தலின்போதே குமுறல்கள் வெடித்தன. எனினும், அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைத்து அந்த தேர்தலை சந்தித்திருந்தார்.


டாக்டர் ராமதாஸ்

ஆனால், தொண்டர்களின் மனநிலையில் இருந்து இந்த விஷயத்தை அணுக நினைக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான், பாமகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக ராமதாஸ் நினைக்கிறார்.. சரிந்துவரும் பாமகவின் வாக்கு வங்கியை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால், திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் முடியும் என்றும் டாக்டர் ஐயா நினைப்பதாக தெரிகிறது. இது தொடர்பான சலசலப்புதான், ராமதாஸ் - அன்புமணி இடையே சமீப காலமாக எழுந்துள்ளதாம்.

அதேபோல இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் அன்புமணியும், செளமியா அன்புமணியும் சேர்ந்து எடுக்கிறார்களாம்.. இது தொடர்பாக தன்னை ஆலோசிப்பதில்லை என்றும், இதனால் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ராமதாஸ் உணர்ந்ததாக கூறப்படுகிறது.

பேரன் முகுந்தன்

அதுமட்டுமல்ல, தன்னுடைய பேரன் முகுந்தனை கட்சி இளைஞரணி தலைவராக நியமித்தபோதும் அன்புமணி குறுக்கீடு செய்ததும், ராமதாஸூக்கு அதிருப்தியை தந்துவிட்டதாம்.. இதுபோன்ற காரணங்களுக்காகவே பதவியை பறித்ததாக கூறப்படுகிறது.

ராமதாஸை பொறுத்தவரை ஆரம்ப காலத்திலிருந்தே தலைமை பதவிக்கு விரும்பவில்லை.. கட்சிக்கு நிறுவனர் என்றாலும், தலைவராக இதுவரை ஒருமுறை கூட ராமதாஸ் இருந்தது இல்லை. ஆனால், தன்னை கலந்தாலோசிக்காமல் கூட்டங்களை கூட்டுவது, முடிவுகளை எடுப்பது என்ற அன்புமணியின் நடவடிக்கைகளால்தான் இப்படி புதிய முடிவை எடுக்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதெல்லாம் உட்கட்சி விவகாரம் என்றாலும், இன்று அமித்ஷா சென்னை வந்துள்ளார்.. தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதறகாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.. கூட்டணி தலைவர்களையும் இன்று சந்தித்து பேச போகிறார்.. இந்த சூழலில் அன்புமணியின் பதவி பறிப்பு மிகப்பெரிய குழப்பத்தை தொண்டர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

ஒரே கல்லில் 2 மாங்காய்

கடந்த 6 வருடமாக மத்திய அமைச்சர் பதவிக்காக காத்திருந்த அன்புமணிக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், மீண்டும் பாஜகவையே நம்பியிருக்கிறார.. எப்படியாவது பாஜக- அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டால், எம்பி பதவி கிடைத்துவிடும் என்றும் நம்பி கொண்டிருந்தார்.. ஆனால், திடீரென தலைவர் பதவியை அன்புமணியிடமிருந்து பறித்து, சரிந்து கிடக்கும் பாமகவை தூக்கி நிமிர்த்துவதுடன், பாஜகவுடனான கூட்டணி கதவையும் அடைத்து, ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துள்ளார் நிறுவனர் ராமதாஸ் என்கிறார்கள்.

பாஜகவுடன் கூட்டணி காரணமாக இத்தனை காலம் அதிருப்தியில் இருந்த பெரும்பாலான பாமக தொண்டர்களுக்கு, டாக்டர் ஐயாவின் இந்த அதிரடி, மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+