Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் இலவச பயணம்.. மலை ரயிலை பார்த்ததுமே மகிழ்ச்சியில் துள்ளிய மாற்றுத் திறனாளி குழந்தைகள்.. அருமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் ரயில்வே நிர்வாகம் எண்ணற்ற புதுமைகளை செய்து வருகிறது. அந்தவகையில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அதை செயல்படுத்தியும் வருகிறது. இது குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.

ரயில் நிலையங்களில் குழந்தைகள் தொலைவதும், மாயமாவதும் அதிகரித்தபடியே உள்ளது.. பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமை, சமூக பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் காணாமல் போக நேரிடுகிறது.

Rail Free Train Ride Childrens day Railway

இந்நிலையில், காணாமல் போன குழந்தைகளை மீட்பதிலும், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதிலும், ரயில்வே பாதுகாப்பு படையின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து வருகிறார்கள்..

காணாமல் போகும் குழந்தைகள் மீட்பு

மாயமான குழந்தைகள், குடும்பத்தை பிரிந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள், அல்லது ஆபத்தில் சிக்கியவர்கள் போன்ற குழந்தைகள் ரயில் நிலையங்களில் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவியை வழங்கி, அவர்களைக் குழந்தைப் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கும் பணியை ரயில்வே தொடர்ந்து செய்து வருகிறது.

அதேபோல, பெரும்பாலான ரயில் நிலையங்களில், குழந்தை உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது.. ரயில் நிலையத்தில் சிறுவர், சிறுமியர் மீட்கப்படும் போது, குழந்தைகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவர். பிறகு மாவட்ட குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.. பெற்றோரிடம் ஒப்படைக்கும் வரை, அரசு நல குழுவிடம் அல்லது தன்னார்வ அமைப்புகளிடம் இருப்பார்கள்.

ரயில்வே உதவி எண்

ரயில் நிலையங்களில் தவிக்கும் சிறுவர், சிறுமியருக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது, ரயில்வே உதவி எண் 139, குழந்தை உதவி மையம் எண் 1098 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்..

அந்தவகையில், நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களிலிருந்து சுமார் 9,000 குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

9000 குழந்தைகள் மீட்பு

கடந்த 2024ம் ஆண்டில் , ரயில் நிலையங்களில் மட்டும் 9,000 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 மாதங்களில் மட்டும், 1,759 சிறுவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.. இதில், 378 பேர் சிறுமியர். இதே காலகட்டத்தில் கடந்த வருடம் 1,441 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்; இதில், 304 பேர் சிறுமியர் ஆவர்.

இந்த தகவலை தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை பாதுகாப்பு ஆணையர் இப்ராஹிம் ஷெரிப் வெளியிட்டுள்ளார். அத்துடன், அனைத்து குழந்தைகளும் நாட்டின் சொத்துக்கள். குழந்தைகளின் தினமான இன்று, அவர்களது உரிமைகளை காப்பதில் உறுதி ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இலவச ஸ்பெஷல் ரயில் பயணம்

அதேபோல இன்று குழந்தைகள் தினத்தையொட்டி, டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற சிறுவர், சிறுமிகளுக்கு
குழந்தைகளுக்காகப் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது..

அதன்படி, சிலிகுரியில் இருந்து ரோங்டாங் ஸ்டேஷன் வரை பாரம்பரிய மலை ரயில் பயணத்தை இலவசமாக மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.. இந்த ரயிலில் பயணம் செய்வதால், மலைகளின் அழகையும், இயற்கையின் பிரம்மிப்பையும், ரயில் பயணத்தின் மகிழ்ச்சியையும் ஒவ்வொரு குழந்தையும் பெற முடியும் என்றும் டார்லிஜிங் இமாலயன் ரயில்வே நம்புகிறது.

மகிழ்ச்சியில் குழந்தைகள்

அதேபோல, மகாத்மா காந்தி டார்ஜிலிங்கிற்கு வந்து 100 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவுகூரும் சதாப்தி ஊர்வலத்தின் ஒரு பகுதியாக, ரோங்டாங் பகுதியை சேர்ந்த பிற குழந்தைகளுக்கும் இந்த வார இறுதியில் ரயில் பயண அனுபவம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தின விழாவில், இந்த சிறப்பு ஏற்பாடும், அதிரடி அறிவிப்பும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை, குஷியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+