பட்டா, சிட்டா, கிரைய பத்திரம் உட்பட நில ஆவணங்களில் ஆதார் இணைக்க முடிவு? இத்தனை நன்மைகளா? சூப்பர்ல
சென்னை : பட்டாவில் உள்ள பிழைகளை சரி செய்ய தனி வெப்சைட் கோரி வரும்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதாவது, நில ஆவணங்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான முயற்சி மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய முயற்சியில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பத்திரப்பதிவு பணிகள் முழுமையும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.. இதனால், பட்டாவில் ஏதாவது இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம்.

பத்திரம் பட்டா, ஆவணங்கள்
அதேபோல, பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், கணினியில் உள்ளீடு செய்யப்படும் நிலையில், பரப்பளவு, பெயர் போன்றவற்றில் வித்தியாசம் இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடும். இந்த பிழையை சரி செய்தால் மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பங்கள் செல்லுபடியாகும்.
ஆனால, பிழைகளை சரிசெய்ய விண்ணப்பித்தால், அதனை வருவாய் துறையில் கிடப்பில் போடுகிறார்களாம்.. பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள், வேலைப்பளுவை காரணம் காட்டி கிடப்பில் போடுவதால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் சமீபத்தில் புகார்கள் எழுந்தன.
பட்டா பிழைகளுக்கு தனி வெப்சைட்
இதுகுறித்து ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.தர்மராஜன் ஒரு சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், "அடுத்தடுத்த பரிமாற்றம், வங்கிக்கடன், கட்டட அனுமதி போன்ற விஷயங்களுக்கு செல்வோர் மட்டுமே புகார் செய்கிறார்களே தவிர, மற்றவர்களுக்கு இப்படி பிழைகள் இருப்பதே தெரியாமல் உள்ளனர். அதனால், இதற்கெனவே ஒரு தனி வெப்சைட்டை உருவாக்கி, வருவாய் துறையிடமுள்ள பட்டா விபரங்களை வெளியிட வேண்டும். பிழையான பட்டாக்கள் தொடர்பான சரியான விபரங்களுக்கான ஆதாரங்களையும், பொது மக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதனடிப்படையில் வருவாய் துறை அலுவலர்கள் பிழை திருத்தும் பணிகளை, மேற்கொண்டால், எளிதில் தீர்வு காணலாம். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறேன்" என்றும் கூறியிருந்தார்.
கிரைய பத்திரங்கள் - ஆதார்
இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதாவது, வீடு, மனை தொடர்பான கிரைய பத்திரங்களை பதிவு செய்யும்போது, ஆதார் அடிப்படையிலான அடையாள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சொத்து விற்பனையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
அதுபோலவே, இந்தியா முழுவதிலும், நில ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகளில் ஒரு பகுதியாக, ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு, மாநிலங்களை அறிவுறுத்தியிருக்கிறதாம்..
பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில், ஆதார் எண்ணை இணைப்பதால், தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க முடியும் என்பதுடன், ஒருவரின் பெயரில் எவ்வளவு சொத்து உள்ளது என்பது குறித்த விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்... மேலும், சொத்து பரிவர்த்தனைகளும எளிதாக நடக்கும்.
தேசிய தகவலியல் மையம்
எனவே, ஆதார் நம்பரை சொத்து தொடர்பான ஆவணங்களில் இணைப்பதற்கு புதிதாக சாப்ட்வேர் தயாரிக்க உள்ளதாகவும், இதற்காக 9.67 கோடி ரூபாயை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க போவதாகவும், அதில், முதல்கட்டமாக 2.41 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், இதை பயன்படுத்தி, சென்னையில் உள்ள தேசிய தகவலியல் மையம் வாயிலாக, மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications