லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம்
சென்னை: மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பல உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே போர் காரணமாக மேற்கு ஆசிய பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, எண்ணெய் விலை ஏற்றம் மட்டுமின்றி, பல நாடுகளில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன், பல அரசுகள் அசாதாரணமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, இலங்கை அரசு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
அங்கு பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் வாகனங்களுக்கு வாரத்திற்கு 15 லிட்டர் எரிபொருள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 200 லிட்டர் வரை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் கட்டுப்பாடுகள்
அதேபோல் வங்கதேசத்திலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு மின்சார பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பல்கலைக் கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, இணைய வழி வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. வீடுகளுக்கு தினசரி சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அரசு நடத்தும் உர ஆலைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. மேலும் எரிபொருள் பங்கீட்டு முறையும் நடைமுறைக்கு வந்துள்ளது.
பூட்டான்
சிறிய நாடாக இருந்தாலும், பூட்டான் எடுத்துள்ள நடவடிக்கைகளும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு எரிபொருள் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கேன்களில் எரிபொருள் விற்பனைக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு
இதேபோல் பாகிஸ்தான் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசுத் துறைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய நாடுகள்
ஆசியாவின் மற்ற நாடுகளான பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் மக்கள் பொதுப் போக்குவரத்து, மிதிவண்டி பயணம் மற்றும் வாகனப் பகிர்வு போன்ற முறைகளை அதிகம் பயன்படுத்துமாறு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மியன்மர் நாட்டில் தனியார் வாகனங்கள் பதிவு எண்களின் அடிப்படையில் ஒற்றை-இரட்டை முறையில் அடுத்தடுத்த நாள்களில் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய - ஆப்பிரிக்கா
ஐரோப்பிய நாடுகளும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஸ்லோவாக்கியாவில் டீசல் வாங்குவதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்லோவேனியா நாட்டில் கார்கள் மற்றும் லாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கு அளவுக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள எகிப்து நாட்டில் வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இரவு நேரத்தில் முன்னதாகவே மூடப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களும் வழக்கத்தை விட முன்கூட்டியே மூடப்படுகின்றன.
டீசல் தட்டுப்பாடு
கென்யாவில், எரிபொருள் பங்கீடு முறையுடன், ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் நாட்டின் பல மாகாணங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் அதிகளவில் எரிபொருள் வாங்குவதைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உலகளாவிய அளவில் எரிபொருள் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளதன் விளைவாக பல நாடுகளில் மக்கள் அன்றாட வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
-
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications