கோட் படத்தில் மாஸ் காட்டிய கேப்டன்! விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்தது இந்த நடிகரா?
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு யார் குரல் கொடுத்தது தெரியுமா? இந்த படத்தில் விஜயகாந்த், செயற்கை நுண்ணறிவு மூலம் கொண்டு வரப்பட்டதை அடுத்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
விஜய், சினேகா, பிரசாந்த், லைலா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், த்ரிஷா, சிவகார்த்திகேயன் என நிறைய பேர் கோட் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது. நடிகர் விஜய் இனி முழுநேர அரசியலில் வருவதால் இதுதான் அவருக்கு கடைசி படம் ஆகும். எனவே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கோட் படத்தில் விஜயகாந்தை வைத்து ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது விஜயகாந்துக்கு விஜய் செய்யும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஏஐ டெக்னிக் மூலம் விஜயகாந்த் திரைக்கு வந்துள்ளதை அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவே பார்க்கிறார்கள்.
அது போல் விஜய், விஜயகாந்த் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் சிலர், விஜயகாந்தின் காட்சிகளை மேலும் மெருகேற்றியிருக்கலாம் என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்திற்கு குரல் கொடுத்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அது வேறு யாருமில்லை, நடிகர் மணிகண்டன்தான். பல குரல்களில் பேசுபவர் என்பதால் மணிகண்டனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் ஏஐ மூலம் விஜயகாந்தை கோட் படத்தில் கொண்டு வருவதாக கூறப்பட்ட போதே, பலருக்கு அய்யோ சொதப்பி விடுவார்களோ என்ற பயம் இருந்தது.
ஆனால் விஜயகாந்துக்கு இதை விட யாரும் சிறப்பாக அஞ்சலி செலுத்த முடியாது என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு அஞ்சலி செலுத்தவே விஜயகாந்த் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த காட்சிகள் அருமையாக இருப்பதாகவும், விஜயகாந்தை போல பல நலத்திட்ட உதவிகளை விஜய் செய்துவருவதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் அபிமானிகள், ரசிகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் வாக்குகள் எல்லாம் விஜய்க்கு போகும் என ரசிகர்கள் பூரிக்கிறார்கள்.
விஜயகாந்தை வைத்து விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய்யை வைத்து எஸ்.ஏ.சி. சில படங்களை எடுத்து அது அந்தளவுக்கு கைக் கொடுக்கவில்லை. அப்போது விஜயை தூக்கிவிட விஜயகாந்த், "செந்தூரப்பாண்டி" என்ற படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார். இந்த நன்றி எப்போதுமே விஜய்க்கு இருக்கிறது. அதனால்தான் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் போது விஜய் கண்கலங்கினார். விஜயகாந்தை உருக்கமாக விஜய் சில வினாடிகள் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பினார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications