கொரோனா.. மருத்துவர்களை புகழும் வைரல் பாடல்.. இணையத்தில் ஹிட் அடித்த GODS IN WHITE பாடல்!
சென்னை: கொரோனா பாதிப்பிற்கு எதிராக மருத்துவர்களின் போராட்டம் குறித்தும் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார் மற்றும் குழுவினர் பாடலாக வெளியிட்டு உள்ளனர்.
கொரோனாவிற்கு எதிராக இந்தியாவே போராடி வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 4878042 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கொரோனாவிற்கு எதிராக ஒவ்வொரு மக்களின் உயிரையும் காக்க மருத்துவர்கள் நாடு முழுக்க போராடி வருகிறார்கள்.
கடந்த 6 மாதங்களாக தங்கள் சொந்த வாழ்க்கையை பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் மக்களை காக்க போராடி வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவர்களின் போராட்டம் குறித்தும் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார் மற்றும் குழுவினர் பாடலாக வெளியிட்டு உள்ளனர்.
ஆர்எம்ஐசி கிரியேஷன்ஸ் (RMIC CREATIONS) சார்பாக இந்த பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை உடையில் கடவுள்கள் என்று பொருள்படும் வகையில் ''காட்ஸ் இன் வொயிட்ஸ் '' GODS IN WHITE.(SONG FOR DOCTORS ON COVID DUTY) என்ற தலைப்பில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பின்னணி பாடகர் ஸ்ரீநிதி, பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார், பின்னணி பாடகர் சாம் பி கீர்த்தன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பிரபல பாடல் ரீமேக் செய்யப்பட்டு, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் இதில் பாடப்பட்டுள்ளது. முக்கியமாக மதுரையில் இருக்கும் மருத்துவர்களுக்கு இந்த பாடலை, பாடல் குழுவினர் டெடிகேட் செய்துள்ளனர்.
எங்களுக்கு என்ன.. கோவிட் கண்டு எங்களுக்கு என்ன என்று தொடங்கும் இந்த விழிப்புணர்வு பாடல் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த பாடலை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications