Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் 1 லட்சம் போனால் இப்படியா? மகன்களையே "கள்ளக்காதலன்" ஆக்கிய சங்கீதா., வசதியான பெண்களே குறி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தொழிலதிபர் மனைவியைக் கள்ளக்காதல் வலையில் விழச் செய்து, ஆபாச வீடியோ காட்டி மிரட்டி 4 கோடி மதிப்பிலான நகைகளை பறித்த ராஜஸ்தான் கும்பல் சிக்கியுள்ளது.. வசதியான பெண்களைக் குறிவைத்துத் திட்டமிட்டே இந்த மோசடியை செய்தது சங்கீதா என்பது தெரியவந்தது.. 2 பிள்ளைகளின் தாயான இந்த சங்கீதா போலீசில் தந்த வாக்குமூலத்தை பாருங்கள்..!!

சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வரும் தொழிலதிபர் ஒருவரின் மனைவியுடன், அதே குடியிருப்பில் வாடகைக்கு குடியேறிய திலீப் என்ற இளைஞர் பழகி வந்துள்ளார்.

Gold Robbery chennai Businessman Sangeetha

கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் முறையற்ற உறவாக மாறியுள்ளது. வேலையில்லாத திலீப்பின் ஆடம்பரச் செலவுகளுக்காக அந்தப் பெண் அவ்வப்போது நகைகளைத் தந்து உதவிய நிலையில், திலீப் ரகசியமாக எடுத்த ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார்.

வீடியோ மிரட்டல்

அந்த வீடியோக்களை வைத்து மிரட்டியே, அப்பெண்ணிடமிருந்து சிறுகச் சிறுக தங்கம் மற்றும் வைர நகைகளை திலீப் பறித்துள்ளார். அண்டை வீட்டுத் தோழியாகப் பழகிய திலீப்பின் தாயார் மூலமாகத் தொடங்கிய இந்த நட்பு, இறுதியில் மிரட்டல் மற்றும் பெருமளவு நகை பறிப்பில் முடிந்துள்ளது.

ரம்யாவிடமிருந்து சிறுக சிறுக சுமார் 850 கிராம் தங்கம், விலை உயர்ந்த வைர நகைகள் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்களைப் பறித்துள்ளார்.

தலைமறைவு திலீப்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திலீப் தனது குடும்பத்துடன் திடீரென தலைமறைவான நிலையில், வீட்டில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது திலீப்பின் மிரட்டல் குறித்து ரம்யா அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திலீப்பின் தாய் சங்கீதா மற்றும் தம்பி அங்கிட் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கியக் குற்றவாளியான திலீப் நகைகளுடன் ராஜஸ்தான் தப்பிச் சென்றது தெரியவந்துள்ள நிலையில், அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சிக்கியது எப்படி? வாக்குமூலம் என்ன

இந்நிலையில், திலீப் எவ்வாறு சிக்கினார்? கைதானவர்கள போலீஸில் தந்த வாக்குமூலம் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை தந்து வருகிறது..

நகைகளை ஒவ்வொன்றாக தந்த நிலையில், கள்ளக்காதலன் திலீப் திடீரென மாயமாகி உள்ளார்.. கடந்த 10 நாட்களாக செல்போனை அணைத்து வைத்துவிட்டு, வீட்டை காலி செய்துவிட்டு போனதும் ரம்யாவுக்கு தெரியவந்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.. இதனால் இதை பற்றி யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்..

வைரம், வெள்ளி நகைகள்

இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்காக லாக்கரைத் திறந்த தொழிலதிபர், நகைகள் மாயமானதை கண்டு ரம்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளார்.. அப்போது கணவரின் காலில் விழுந்து கதறிய ரம்யா, திலீப் தன்னுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டியதால், சுமார் 850 கிராம் தங்கம், 120 கிராம் வைர நகைகள் மற்றும் 2.5 கிலோ வெள்ளியைப் பறி கொடுத்த உண்மையை ஒப்புக்கொண்டார்..

இதற்கு பிறகுதான் வேப்பேரி போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளனர்.. உடனே போலீசார் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் புரசைவாக்கத்திலேயே இன்னொரு அப்பார்ட்மெண்ட்டில் ஒளிந்திருப்பது தெரியவந்தது.. அங்கு அதிரடியாக நுழைந்த போலீசார், திலீப்பின் தாய் சங்கீதா மற்றும் தம்பி அங்கிட் ஆகியோரைக் கைது செய்தனர்..

சங்கீதா வாக்குமூலம்

விசாரணையில் சங்கீதா அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. மகாராஷ்டிராவை சேர்ந்த சங்கீதா, தனது மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குடியேறி, அங்குள்ள வசதியான தொழிலதிபர்களின் மனைவிகளுடன் முதலில் நட்பை பலப்படுத்துவாராம்..

பிறகு தனது மகன்களில் யாரிடம் அந்த பெண்கள் நெருக்கமாகப் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்து, அவர்களின் செல்போன் நம்பரை கொடுத்து வலை விரிப்பார்.. அப்படித்தான் ரம்யாவையும் தனது மூத்த மகன் திலீப்பின் காதல் வலையில் விழச் செய்துள்ளார்..

தங்கம் விலை - தங்க நகைகள்

இப்போது தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இதனைப் பயன்படுத்திப் பெரும் லாபம் பார்க்க சங்கீதா திட்டமிட்டுள்ளார்.. அதன்படி, ரம்யாவுடன் திலீப் நெருக்கமாக இருந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டியே, பல கோடி மதிப்பிலான நகைகளைச் சுருட்டினார்களாம்..

கைதான சங்கீதா குடும்பத்தினர் மீது ஏற்கனவே மாதவரம் மற்றும் ஐஸ்ஹவுஸ் ஸ்டேஷன்களில் இது போன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர்கள் திட்டமிட்டே பல தொழிலதிபர் மனைவிகளை ஏமாற்றி வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+