தங்கத்தில் முதலீடு செய்தால் 'டபுள்' மடங்கு லாபம்.. கோடியில் வசூல் செய்த நகைக்கடை உரிமையாளர் கைது!
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தங்கத்தில் முதலீடு செய்தால் 'டபுள் மடங்கு' பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் வசூல் செய்துவிட்டு, எஸ்கேப் ஆன நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் தங்கம் விலை கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதற்கு ஈடாக வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், முடிந்த அளவுக்கு விலை குறையும்போது வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர் ஒருவர், தங்கத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வாணியம்பாடி நகைக்கடை பஜாரில் ரூபி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தங்கம் விலை உயர்ந்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்தால் தனக்கு வரும் லாபத்தில் 25 சதவீதம் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய அப்பகுதியைச் சேர்ந்த 11-க்கும் மேற்பட்டவர்கள் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் முதலீடு பெற்ற அவர், மக்களுக்கான பணத்தை திரும்ப வழங்காமல் பணத்துடன் தலைமறைவானார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள், இது குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் சென்னை சைதாப்பேட்டையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதின்றத்தில் ஆஜர்படுத்தி வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications