சென்னையில் 1000 கட்டினால் தங்க நகை.. தி நகரில் 55 லட்சம் சம்பாதித்த தம்பதி.. இறுதியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை தியாகராய நகரில் தினேஷ்குமார், புவனேஸ்வரி தம்பதி கடந்த 2021-ம் ஆண்டு முதல் தீபாவளி சீட்டும், ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார்கள். தீபாவளி சீட்டுக்கு மாதம் ரூ. 1,000 வசூலிப்பார்களாம். தீபாவளி பண்டிகையையொட்டி தங்க நகைகளும், பட்டுப்புடவையும், பட்டாசும் கொடுப்பார்களாம். 250 பேர் சேர்ந்துள்ளார்களாம். ஆனால் அந்த தம்பதி சொந்த கடனை அடைப்பதற்காக தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 55 லட்சத்தை சுருட்டியதாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு 1000 ரூபாய்க்கு தீபாவளி சீட்டு கட்டுவோர் பலர் இருக்கிறார்கள். மாதம் மாதம் 1000 கட்டும் போது, தீபாவளியின் போது, பட்டாசு, ஸ்வீட், பணம், பரிசு தருவதாக கவர்ச்சி வாக்குறுதி அளிப்பார்கள். நல்ல லாபம் என்று நினைத்து சேரும் மக்கள் பல சமயங்களில் ஏமாந்துவிடுகிறார்கள். என்னதான் தீபாவளி சீட்டை பல வருடமாக நடத்தி வந்தாலும் ஏமாற்ற வேண்டும் என நினைத்தால் ஒரே நாளில் போய்விடும்.. அப்படித்தான் தியாகராய நகரில் நடந்துள்ளது.

சென்னை தியாகராய நகர், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் சங்கீதவாணி என்பவர் திநகர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது:"எங்கள் பகுதியில் (தி நகர் பாண்டிபஜார் ) தினேஷ்குமார் (36) என்பவர் வசித்தார். அவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு முதல் தீபாவளி சீட்டும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார்கள்.
தீபாவளி சீட்டுக்கு மாதம் ரூ. 1,000 வசூலிப்பார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி தங்க நகைகளும், பட்டுப்புடவையும், பட்டாசும் எங்களுக்கு கொடுப்பார்கள். நானும் ஆர்வத்துடன் சீட்டு கட்டினேன். எனக்கு தெரிந்த 250 பேரையும் சேர்த்துவிட்டேன். கடந்த தீபாவளி பண்டிகை தினத்தன்று தினேஷ்குமாரும் அவரது மனைவி புவனேஸ்வரியும் திடீரென்று தலைமறைவாகிவிட்டார்கள். நானும், 250 பேரும் சேர்ந்து ரூ. 27 லட்சம் வரை தீபாவளி சீட்டு கட்டினோம். அந்த பணத்தையும் தராமல், அவர்கள் அறிவித்தபடி தங்க நகை, பட்டுப்புடவை, பட்டாசு போன்றவையும் தராமல் தப்பி ஓடிவிட்டார்கள்" என்று கூறியிருந்தார்,
இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது, மொத்தம் ரூ. 55 லட்சம் வரை பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் இருவரும் லட்சக்கணக்கில் கடன் வாங்கியது தெரியவந்தது. மேலும் அந்த கடனை அடைப்பதற்காகவே தீபாவளி சீட்டும் ஏலச்சீட்டும் நடத்தி மக்கள் பணத்தை ஏப்பம் போட்டு உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தலைமறைவான தினேஷ்குமாரையும், அவரது மனைவி புவனேஸ்வரியையும் போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையே அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வசூலித்த லட்சக்கணக்கான பணத்தை வைத்து கடனை அடைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications