ரிசர்வ் வங்கியின் உத்தரவால் இனி பில் இல்லாத தங்க நகையை அடகு வைக்க முடியாதா? மேஜர் பாயிண்ட்
சென்னை: தங்க நகைகளை இனி ஆவணங்கள் இல்லாமல் அடகு வைக்க முடியாதபடி ரிசர்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தங்க நகைக்கடனில் முறைகேடுகளை தடுக்க, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் நகை ரசீது இல்லாதவர்கள் தங்க நகையை அடகு வைக்க முடியாதா என்ற கேள்விகள் இருக்கும். அவர்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
திருட்டு நகைகளை அடகு வைப்பதை தடுக்கும் முயற்சியாக பில் இல்லாத நகைகளை அடகு வைக்க ரிசர்வ் வங்கி தற்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல் நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய விதிகளை ரிசரவ் வங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தங்க நகை அடகில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டியதுடன், அதை தடுக்க சில வழிகளை இனி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
ரிசர்வ் வங்கி சுற்றிக்கையின் படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகைக்கடன்கள் பெறுவதற்கும் அதனை மதிப்பிடுவதிலும் குறைபாடுகள் இருக்கிறது. குறிப்பாக வாடிக்கையாளர் இல்லாமல் தங்கத்தை மதிப்பிடுவது நடக்கிறது. தங்க நகைக்கடன்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லை. வாடிக்கையாளர் பணம் செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது.
நகைக்கடன் செயல்முறை
நகை அடகு வைப்பதில் கண்காணிப்பில் பலவீனம் நிலவுகிறது என்றும், தவறான எடை பிரச்சனையாக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் கூறியது. மேலும் இதனை தடுக்க நகைக்கடன் தொடர்பான தங்களின் செயல்முறைகள் மற்றும் கொள்கைகளை விரைந்து மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியது.
நகை மறுஅடகு
இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நகையை அடகில் இருந்து மீட்டு மறு அடகு வைக்க தனியார் கந்துவட்டிக்காரர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரங்களை கொடுத்து வாங்கி, பின்னர் மறு அடகு வைத்த பின்னர், கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைக்கிறார்கள். இதனால் கந்து வட்டிக்காரர்கள் தற்போது குஷியாக இருக்கிறார்கள்.
75 சதவீதம் கடன்
இந்த விதி ஒரு புறம் எனில், அடுத்ததாக புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, "ஒருவர் கடன் வாங்க போது, அவரது தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இனி ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும். அதேபோல் தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும் போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.
தங்க நாணயங்கள்
தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும். தங்க நகை போல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம். ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.
ஏல நடைமுறையில் மாற்றம்
தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்கு தங்கத்தை திருப்பி தர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்" இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
ஏன் இப்படி உத்தரவு
நகைக்கடன் தொடர்பான வரைவு விதிகளை இணையதளத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிலையில், அதுபற்றி மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அடமான நகைக்கு வட்டி கட்ட முடியாமல் போனால், வட்டியுடன் சேர்த்து வசூலிப்பதற்காக 75 சதவீதம் தான் பணம் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
பில் இல்லாமல் நகை அடகு சாத்தியமா
அதேபோல் தங்கத்தை அடமானம் வைக்கும்போது உரிமையாளர் என்பதற்கான ரசீது கட்டாயமாக்கப்படுவது வரும் காலத்தில் திருட்டு நகைகளை விற்க முடியாத நிலை வரும் என்றாலும், இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லை என்பது எதார்த்தமான உண்மை என்கிறார்கள் மக்கள். நகையை அடகு வைக்கும் போது, நகை உங்களுடையதுதான் என சுய உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்யும்படி கேட்கவே வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். ஏனெனில் பல வீடுகளில் மூதாதையரின் நகைகள் உள்ளன. அதற்கான ஆவணங்கள் இல்லை. இனிமேல் வரும் புதிய நகைகளுக்கே இப்படியான பில்கள் தேவைப்படும். எனவே புதிதாக நகை வாங்கியவர்கள், அதற்கு பில்லை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடகு வைக்கும் போது உதவும்.
நகை அடகு வைக்க வழிகள்
நகை அடகு வைக்க முடிவு செய்வோர், இனி தனிநபர் கடன் போல் ஓராண்டில் கட்ட முடியும் என்றால் மட்டுமே நகை அடகு வைப்பது நல்லது. அல்லது திருப்பி வைக்க மொத்த பணத்தையும் ஏற்பாடு செய்ய முடியும் என்றால் நகை அடகு வைக்கலாம். மாறாக முடியாது என்றால் இனி சிக்கல் தான். குறைவான தொகைக்கு அல்லது அடகு வைத்து திருப்ப முடிந்த அளவுக்கு அடகு வைப்பது தான் நல்லது. அதேநேரம் ரிசர்வ் வங்கி அறிவிப்பால் நகை அடகுக் கடை நடத்துவோர் அதிக பயன் பெற வாய்ப்பு உள்ளது. அங்கு நகைகளை அடகு வைத்து நகையை இழக்க வேணடிய நிலைக்கு மக்கள் தள்ளப்படவும் வாய்ப்பு உள்ளது.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications