வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்!
சென்னை: தங்கம் விற்கும் விலைக்கு, அதை அடகு வைத்து மீட்பது பெரிய சவாலான காரியமாக இருக்கிறது. இதில் அடகு வைத்தவருக்கு உடல்நலம் சரியில்லை என்றாலோ, உயிரிழந்துவிட்டாலோ, அந்த நகையை மீட்பது என்பது அதை விட சவாலான காரியம். ஆனால் இதற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் நகைகளை மீட்க முடியும்.
ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றுகின்றன. எப்படி இருந்தாலும், அடகு வைத்தவர்களை தவிர, மற்றவர்களால் நிச்சயம் நகையை மீட்க முடியும்.

சென்னை டூ சொந்த ஊர்
சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது மனைவியின் பிரவசத்திற்காக அவரது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். போவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் தங்க நகையை அவரது மனைவி அடகு வைத்திருந்தார். இப்போது ஓர் ஆண்டு காலம் முடியப்போகிறது. எனவே நகையை மீட்க வேண்டி இருந்தது. ஆனால், நகையை அடகு வைத்தவர்தான் நேரில் வர வேண்டும். பிரசவ காலம் என்பதால் அவரது மனைவியால் சென்னைக்கு வர முடியாது. இப்படியாக நகைக்கான மொத்த பணத்தையும் கட்டி முடித்த பின்னரும், தற்போது நகையை எடுக்க முடியாத சிக்கலில் நண்பர் இருக்கிறார்.
இது குறித்து சென்னை வங்கியில் விசாரித்தபோது, நகையை அடகு வைத்தவர் நேரில் வராமலேயே எப்படி நகையை பெற்றுக்கொள்வது என்பது குறித்த நடைமுறையை வங்கி ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
முதலில் நகையை அடகு வைத்தவர் தன்னுடை மெயில் ஐடியை வங்கி கணக்குடன் இணைத்திருக்கிறாரா? என்பதை பார்க்க வேண்டும். அப்படி இணைத்திருந்தால், நகை அடகு வைத்த வங்கி கிளையில் கடிதம் ஒன்றை கொடுப்பார்கள். 'Annexure VI - Draft of Letter of Authority by the Borrower to deliver Jewellery to Another Person' என்கிற லெட்டரை கொடுப்பார்கள்.
யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
அதில் நகையை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அந்த நபர் யார்? அவருடைய ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி, எந்த ஊரில் இருக்கிறார்களோ, அந்த ஊரின் வங்கி கிளையிலிருந்து இந்த லெட்டரை ஸ்கேன் செய்து, சென்னை கிளைக்கு அனுப்ப வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட நபர் சென்னை கிளைக்கு சென்று, கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் நபர் நான்தான் என்பதற்கான ஆதாரங்களை சமர்பித்து நகையை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
உயிரிழந்துவிட்டால் என்ன ஆகும்?
இது சிம்பிள் வழிமுறை. ஆனால், நகையை அடகு வைத்தவர் உயிரிழந்துவிட்டால் நகையை மீட்பது கொஞ்சம் சிக்கலானது. அடகு வைத்தவர்களுக்கு வாரிசுகள் இருந்தால் அவர்கள் அனைவரும் வாரிசு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அடகு வைக்கும்போது நாமினி என ஒருவரை குறிப்பிட்டிருந்தால், அவரிடம் நகையை வழங்க வங்கி முன்னுரிமை கொடுக்கும். இப்படியாக வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க முடியும்.
-
Gold Rate: தமிழ் புத்தாண்டு தினத்தில் ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு? -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலாமா..? வேண்டாமா..? நிபுணர்கள் சொல்லும் முக்கிய பாயின்ட்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications