தங்கம் விலையில் அசுர வேகத்தில் மாற்றம்.. "ரெட் அலர்ட்".. உடனே ஓடுங்க.. வல்லுநர் விடுத்த வார்னிங்
டெல்லி: இந்தியா உட்பட உலகம் முழுக்க தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹12,546 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,500 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,650 ஆகவும் உள்ளது. சர்வதேச அளவில் 1.7 ட்ரில்லியன் டாலர் தங்க மார்க்கெட்டில் மட்டும் அழிந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு செப்டம்பர் 26, 2025 நிலவரப்படி 880 மெட்ரிக் டன்களைத் தாண்டி, அதன் மொத்த மதிப்பு 95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 3,16,000 கிலோகிராம் தங்கத்தை சேர்த்துள்ளன. அதேசமயம் தங்கத்தின் விலை 63% அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு உலகப் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளே காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நாடத் தூண்டியுள்ளது. இந்த நிலை ஒரு எச்சரிக்கை மணி.. அதாவது ஒரு ரெட் அலர்ட் என 'டாக்ஸ் பட்டி' நிறுவனர் சுஜித் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக அரசியலில், தங்க மார்க்கெட்டில், பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான சிவப்பு எச்சரிக்கை இது என அவர் எச்சரிக்கிறார். அதாவது World Order மாற்றம் அடைகிறது. தங்கம் விலை இப்போது ஏறி இறங்குவது அதற்கான அறிகுறிதான் என்று 'டாக்ஸ் பட்டி' நிறுவனர் சுஜித் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு அவர் 7 முக்கிய காரணங்களை மற்றும் அறிகுறிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். அவை 1.தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள விரைவான உயர்வு. 2. 2008 நிதி நெருக்கடி, 3.கோவிட்-19 மற்றும் 4. வர்த்தகப் போர்கள் 5. டிரம்ப் வரி விதிப்பு, 6. உலக அரசியலில் சீனாவின் ஆதிக்கம் 7. டாலர் மீதான மோகம் குறைவது போன்ற நெருக்கடி காலங்களில் தங்கம் விலை உயர்ந்தாலும், இப்போதைய வேகம் முன்னெப்போதும் இல்லாதது என்கிறார் பங்கர். இப்போது எதிர்பார்த்ததை விட தங்கத்தின் விலை வேகமாக உயருகிறது என்று அவர் கூறி உள்ளார்.
தங்கம் நோக்கி நகரும் மக்கள்
பாரம்பரிய பாதுகாப்பான முதலீடுகளில் இருந்து தங்கம் நோக்கி முதலீட்டாளர்கள் நகர்கின்றனர். அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களிலிருந்து விலகி முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தை வாங்குகின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க டாலர் தனது மிகப்பெரிய ஆறு மாத சரிவை சந்தித்துள்ளது. இதை முதலீட்டாளர்கள் "பண மதிப்பு சரிவு வர்த்தகம்" என்று அழைப்பதாக பங்கர் கூறுகிறார். அதாவது பணத்தின் மதிப்பு சரியும். இதனை மனதில் வைத்து மக்கள் மேற்கொள்ளும் வேற்று வர்த்தகம் பண மதிப்பு சரிவு வர்த்தகம் ஆகும்.
மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி செல்கின்றனர். ஏனெனில் தங்கத்திற்கு கடன் ஆபத்து, கொள்கை சார்பு மற்றும் அச்சிட முடியாத தன்மை போன்ற காரணங்களால் இது சிறந்த பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
தங்கத்தை வாங்கும் இந்தியா
முன்பு தங்கத்தை விற்ற சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தற்போது முக்கிய தங்கம் வாங்குபவர்களாக மாறியுள்ளன. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஒரு உத்தியாக இதை பயன்படுத்துகின்றன. 2022ல் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், டாலர் இருப்புகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்டின.
இதன் காரணமாகவே வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலைகளும் அதிகரித்து வருகின்றன. மத்திய வங்கிகளின் மொத்த இருப்புக்களில் தங்கத்தின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்யா (29.5% இலிருந்து 35.8%), சீனா (4.9% இலிருந்து 6.7%), ஜப்பான் (5.1% இலிருந்து 6.8%), இந்தியா (9.6% இலிருந்து 13.1%), இங்கிலாந்து (13.5% இலிருந்து 16.6%) என இந்த சதவிகிதங்கள் உயர்ந்துள்ளன.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீதான அழுத்தம், குறைந்த வருமானம், வரிகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை தங்கத்தின் கவர்ச்சியை ஒரு பாதுகாப்பு முதலீடாக அதிகரித்துள்ளன.
வர்த்தக மோதல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் வர்த்தகப் போர்கள் ஆகியவை உலகளாவிய நிதியமைப்பில் டாலரின் பங்கை பலவீனப்படுத்தும் நேரத்தில், தங்கம் நம்பிக்கையை கொடுக்கிறது. இதுவே தங்கம் மீதான மோகம் அதிகரிக்க காரணம். இது பேராசை பற்றியது அல்ல, ஆனால் பயம், நம்பிக்கை மற்றும் பலவீனம் பற்றியது என பங்கர் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications