சல்லி சல்லியா நொறுங்கிய தங்க மார்க்கெட்! 200 வருஷ பழக்கமே மாற போகுது! புலம்பி தவிக்கும் வியாபாரிகள்!
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் 'இனி தங்கம் வாங்க முடியுமா?' என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. நகைக்கடைகளில் மக்கள் வருகை முற்றிலும் குறையவில்லை என்றாலும், அவர்கள் வாங்கும் அளவு பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், எடை குறைந்த ஆனால், பார்க்க பெரிதாக இருக்கும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்கின்றனர் வியாபாரிகள்.
சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு, உலக அரசியல் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உயர்ந்து வந்த நிலையில், தற்போது வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.97,600 ஆக உயர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தங்கம் விலை
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி ரூ.88,600 ஆகவும், நவம்பர் 13ஆம் தேதி ரூ.95,920 ஆகவும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இடையில் சில நாட்கள் விலை சற்றே குறைந்தாலும், மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்தது. டிசம்பர் 12ஆம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.98,960 ஆக உயர்ந்து, மீண்டும் ஒரு புதிய சாதனையை பதிவு செய்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த விலையிலேயே நீடித்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் பவுனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்து சென்றது.
தங்க சந்தை
அந்த நாளில் தங்கம் ரூ.1 லட்சத்து 120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது தங்க சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறுநாள் சிறிதளவு விலை குறைந்திருந்தாலும், உயர்ந்த நிலையிலேயே தங்கம் விலை தொடர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.99,200 ஆக விற்பனை செய்யப்பட்டது.
தங்க விலை உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.12,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1,08,216 ஆக உள்ளது. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.222 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.11 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நடுத்தர மக்கள்
தங்கம் விலை பவுனுக்கு ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் 'இனி தங்கம் வாங்க முடியுமா?' என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. தங்க நகைகள் அழகு, அந்தஸ்து, கலாச்சார அடையாளம், பாதுகாப்பான முதலீடு என பல காரணங்களால் தமிழ்சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவை. ஆனால் தற்போதைய விலையேற்றம், அந்த பாரம்பரிய பழக்கத்திற்கே சவால் விடும் நிலையை உருவாக்கியுள்ளது.
நகை வியாபாரம்
நகைக்கடைகளில் மக்கள் வருகை முற்றிலும் குறையவில்லை என்றாலும், அவர்கள் வாங்கும் அளவு பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எடை குறைந்த, ஆனால் பார்ப்பதற்கு பெரிதாக தோற்றமளிக்கும் நகைகளையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால், சிறிய நகைக்கடைகள், நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலை உயர்வு தொடர்ந்தால் இந்தத் தொழில் எதிர்காலத்தில் மேலும் சிக்கலை சந்திக்கக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நகை வியாபாரிகள் புலம்பல்
சர்வதேச காரணிகள் காரணமாக ஏற்பட்ட இந்த விலை உயர்வு, சாமானிய மக்களுக்கும், பாரம்பரிய நகை தொழிலையும் நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் பெரும் சுமையாகவே மாறியுள்ளது என்கின்றனர் தங்க நகை உற்பத்தியாளர்களும், நகைக் கடை உரிமையாளர்களும்.
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
Gold Rate: சென்னையில் தங்கம் விலை சரிவு! காலையில் கூடிய வேகத்தில் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications