தங்க சுரங்கம் இருக்கு வாங்க.. குலுங்கிய சென்னை அசோக் நகர்.. கட்டு கட்டாக பணத்தோடு வந்த மக்கள்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக் நகரில் இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் ஒன்று மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

தற்போது தமிழ்நாடு முழுக்க வித விதமான மோசடிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் ஈமு கோழி, லில்லி புட், ரைஸ் புல்லிங் போன்ற மோசடிகள் நடந்தன. இது எல்லாம் எச். வினோத் சதுரங்க வேட்டை என்ற பெயரில் படமாகவே எடுத்துவிட்டார்.

Gold Mining : People rushed to invest money in trading in Chennai after bogus claim

அதனால் இந்த விவகாரத்தில் மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் புதிய விதமான வேறு ஒரு மோசடி தற்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அது டிரேடிங் மோசடி.

அதாவது எங்களுக்கு இவ்வளவு பணம் கொடுங்கள்.. உங்களுக்கு மாதம் இவ்வளவு வட்டி கொடுக்கிறோம். டிரெண்டிங்கில் போட்டு மாதம் எங்களால் இவ்வளவு தொகை பணம் கொடுக்க முடியும் என்று கூறி மோசடி செய்து வருகின்றனர்.

உதாரணமாக 1 லட்சம் கொடுத்தால் மாதம் 20 ஆயிரம் வரை வட்டி மட்டுமே கொடுக்கிறோம். டிரெண்டிங்கில் முதலீடு செய்து, அதில் வரும் லாபம் மூலம் உங்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்று கூறி மோசடி செய்து வருகின்றனர்.

டிரெண்டிங் மோசடி: இந்த நிலையில்தான் சென்னையில் பிராவிடான்ஸ் என்ற நிறுவனம் புதிய விதமான மோசடி ஒன்றில் இறங்கி உள்ளது. சிவசக்தி என்பவர் சென்னையில் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். விருகம்பாக்கத்தில் இதற்காக அலுவலகம் வைத்து இருந்த இவர்.. தங்கள் நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 20000 தருவோம் என்று கூறி உள்ளார்.

இதனால் பலரும் முதல் கட்டமாக 1 லட்சம் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை 10 ஆயிரம் என்று மாதம் 20 ஆயிரம் கொடுத்து உள்ளார். இரண்டு மாதங்களுக்கு முறையாக பணம் கொடுத்துள்ளார்.

அதன்பின் இவர் முதலீட்டாளர்களை அழைத்து மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் இன்னும் கூடுதல் முதலீடு கொடுத்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்றுள்ளார். அவர் முதல் இரண்டு மாதம் சரியாக பணம் கொடுத்ததால் பலரும் 3- 5 லட்சம் வரை கூட முதலீடு செய்துள்ளனர்.

இப்படி முதலீடு செய்ய வந்தவர்களிடம் எல்லாம்.. என்னிடம் கானாவில் தங்க சுரங்கம் இருக்கு. அதில் வரும் தங்கத்தை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை டிரேடிங் செய்கிறேன். அதனால் நிறைய வருமானம் வருகிறது. அதைதான் என்னிடம் முதலீடு செய்பவர்களிடம் நாங்கள் கூடுதல் பணம் கொடுக்கிறேன் என்று கூறி இவர் பணம் வாங்கி உள்ளார்.

கூடுதல் முதலீடு: கூடுதல் முதலீடு வாங்கிய பின் மொத்தமாக அந்த பணத்தை சுருட்டிக்கொண்டு சிவசக்தி எஸ்கேப் ஆகி உள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு யாருக்கும் 2 மாதங்களுக்கு பின் பணம் கொடுக்காமல் சிவசக்தி துபாய்க்கு தப்பி ஓடி உள்ளார்.

அசோக் நகர்: இதையடுத்து சென்னை அசோக் நகரில் இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள் புகார் கொடுத்துள்ளனர். தங்களிடம் பல லட்சங்களை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கூறி சிவசக்திக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிவசக்திக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+