தங்க தகடுகள் 7, தங்க முலாம் கதவு, சன்னிதானத்திலும் தங்கம் திருட்டு! சபரிமலை கோயிலில் வெடித்த ரகசியம்
சென்னை: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2019ம் ஆண்டு மிகப்பெரிய திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. இந்த திருட்டு சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்த பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2019-ல் கோயில் கருவறைக்கு முன்பாக உள்ள துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கக் கவசங்கள் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன... இந்த தங்க கவசங்கள் முக்கிய மதிப்பு வாய்ந்தவை என்பதால், அவற்றின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.

இந்த திருட்டில் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் பேத்தி என்பவரின் பெயர் அடிபட்டுள்ளது.. அவர் தங்கக் கவசங்களை சென்னைக்கு கொண்டு சென்று, தங்க முலாம் பூசி, பிறகு மறுபடியும் கோவிலில் ஒப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மீண்டும் கோவிலில் ஒப்படுத்தப்பட்ட தங்க கவசங்களின் மொத்த எடை 4.54 கிலோக்கள் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.
எஸ்டிஐ எனப்படும் விசாரணை குழு
இந்த விவகாரம் வெளியாகியதும், கேரள ஹைகோர்ட் விசாரணை நடத்த SIT எனப்படும் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த குழுவானது,, கோவிலின் துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவு தங்கக் கவசங்களில் திருட்டு நடந்ததை உண்மையாக பதிவு செய்து, 2 வழக்குகளை தொடங்கியது.
இந்த குழுவின் விசாரணையில், உன்னிகிருஷ்ணன் போத்தி முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார்.. மேலும் விசாரணையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார். அவர் பதவிக் காலத்திலேயே,, தேவசம் போர்டு உறுப்பினராக இருந்த விஜயகுமார் கைதானது கேரளாவில் அதிர்ச்சியை தந்தது.. இப்போது இந்த விசாரணையின் மூலம், இவ்வழக்கில் கைதானோரின் எண்ணிக்கை மொத்தம் 10 ஆக உயர்ந்துள்ளது.
குற்றவாளிகளின் குறிக்கோள்?
இந்த திருட்டு குறித்து விசாரணை குழு சொல்லும்போது, திருட்டு மிகவும் திட்டமிட்டு நடந்ததாகும். தங்கக் கவசங்களை சென்னையில் மாற்றியமைத்து, மீண்டும் கோவிலில் ஒப்படுத்துவது குற்றவாளிகளின் குறிக்கோள் குறித்து தெளிவாக காட்டுகிறது.
அதேசமயம், கோவிலின் பாதுகாப்பு பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணையை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.. ஆனால், குற்றவாளிகள் கோயிலின் மதிப்பை குறிவைத்து செயல்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அறிக்கை தாக்கல் - 7 தகடுகள்
இப்படிப்பட்ட சூழலில், இந்த தங்க திருட்டு சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.. அதாவது திருட்டின் முழுமையான நிலை மற்றும் தங்கம் மீட்கப்பட்ட அளவு குறித்து அக்குழுவானது கொல்லம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது..
அந்த அறிக்கையில், துவார பாலகர் சிலைகளில் மட்டுமின்றி மேலும் 7 தகடுகளிலிருந்தும் தங்கம் திருடப்பட்டுள்ளது.. அதாவது, துவார பாலகர் சிலைகள் மட்டுமின்றி, தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவில் இருந்து கூட தங்கம் திருடப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது...
சன்னிதானத்தில் தங்கம் திருட்டு
தங்கம் திருட்டு சன்னிதானத்தின் பல பகுதிகளிலும் நடந்துள்ளது. இந்த திருட்டு மிகவும் திட்டமிட்டு நடந்ததை உணர்த்துகிறது. கோயிலின் பாதுகாப்பு முறைகள் பலவகையில் சிக்கலான நிலையில் இருந்ததால், குற்றவாளிகள் தங்களது செயல்களை திட்டமிட்டு நிறைவேற்றியதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
திருட்டின் முழுமையான பரப்பும், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட தங்கம் அளவும் சிக்கலான முறையில் கணக்கெடுக்கப்பட உள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தங்க முலாம் கதவு
நாளுக்கு நாள் சபரிமலை கோயில் திருட்டு சம்பவம் குறித்து வெளியாகும் தகவல்கள், கோயிலின் பாதுகாப்பு குறைபாடுகளை எடுத்துரைப்பதாக உள்ளது..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி, 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது, துவார பாலகர் சிலை மட்டுமின்றி தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது, தங்க முலாம் பூசப்பட்ட கதவு, சிலைகள் மட்டுமின்றி சன்னிதானத்தின் பல இடங்களில் தங்கம் திருட்டு நடந்துள்ளது, பக்தர்களை அதிர வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications