விழி பிதுங்க வைக்கும் தங்கம் விலை! சென்னையில் ஒரு குண்டுமணிக் கூட வாங்க முடியாது போலயே!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 58 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளி கூட வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

சென்னையில் அக்டோபர் 19ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 320 உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாயும், ஒரு கிராம் ரூ 7280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ 58ஆயிரத்தை தாண்டியது. அதாவது ஒரு சவரன் ரூ 58,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 2 உயர்ந்து கிராம் ஒன்று ரூ 107க்கும் ஒரு கிலோ 1,07,000 க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,280 -க்கு விற்பனையானது. அது போல் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7,160 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டின் போது தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் குறைந்து 50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு அதிகரித்த நிலையில் தற்போது 58 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்குள் ரூ 60 ஆயிரத்தை எட்டி விடும் நிலை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு புதிதாக திருமணமான தம்பதிக்கு மோதிரம் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த வழக்கத்தை சாமானிய மக்கள் எப்படி செய்ய போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
சென்னையில் நேற்று அக்டோபர் 18 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. இன்று ஒரு கிராம் விலை ரூ 7240 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,920 க்கு விற்பனையானது.
அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 2 உயர்ந்து ரூ 105 க்கு விற்பனை செய்யப்பட்டது. 18 காரட் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ரூ 47,880-க்கும் கிராமுக்கு ரூ 5,985 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications