பொட்டு தங்கமாவது வாங்கிடுங்க.. அடுத்த வருஷமெல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாது! என்ன காரணம்?
சென்னை: 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2,600-2,700 அமெரிக்க டாலர் வரை செல்லக்கூடும். இந்தியாவில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1 முதல் 1.10 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
உலக பொருளாதாரத்தில் எவ்வித மாற்றம் நடந்தாலும் அதன் தாக்கம் நேரடியாக வெளிப்படும் துறை தங்க சந்தையாகும். "பாதுகாப்பான முதலீடு" (Safe Haven Investment) என்ற பிம்பத்தில் தங்கம் எப்போதுமே முதலீட்டாளர்களை கவர்ந்து வந்துள்ளதால், அதனை விலை வரலாறு காணாத அளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உலக அரசியலில் அசாதாரண சூழல்கள், உலகளாவிய பொருளாதார மந்த நிலை, எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் சரிவு போன்றவை தங்க விலையை உயர்த்தும் முக்கிய காரணிகளாக செயல்படுகின்றன.

தங்கம் விலை
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் தங்கத்தின் விலை கடந்த ஆண்டை விட சுமார் 12-15% உயர்வைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் தற்போது 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை சுமார் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 93,000 ரூபாயை எட்டியிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,400 அமெரிக்க டாலருக்கு அருகே நிலைத்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் டாலரின் மதிப்பு சற்று பலவீனமடைந்துள்ளது. டாலர் பலவீனப்படும்போது தங்கத்தின் தேவை தானாகவே அதிகரிக்கும்.
தங்கம் முதலீடு
மத்திய கிழக்கு பிரதேசம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய சந்தைகளில் நிலவும் அச்சம் தங்க விலையை உயர்த்துகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் தங்கத்தை முதலீடாக கருதாமல் அதனை ஒரு கவுரமாக கருதுகின்றனர். திருமணம், விழாக்கள் போன்றவற்றுக்காக இந்தியாவில் எப்போதுமே தங்கத்திற்கு கூடுதல் தேவை உண்டு. இது உள்நாட்டில் தங்கத்தின் விலையை கணிசமாக உயர்த்துகிறது. மேலும், பண வீக்கத்தின் காரணமாக உணவு பொருட்கள், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர்.
பாதுகாப்பான முதலீடு
சந்தை நிபுணர்களின் கணிப்புப்படி, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2,600-2,700 அமெரிக்க டாலர் வரை செல்லக்கூடும். இந்தியாவில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1 முதல் 1.10 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்பு அதிகம் என மதிப்பிடப்படுகிறது. நீண்டகால முதலீடு செய்ய விரும்புவோர் தற்போது வாங்குவது நல்ல தேர்வாகும். குறுகிய கால லாபம் எதிர்பார்ப்பவர்கள் சிறிய அளவில் வாங்கி, விலை அதிகரித்தவுடன் விற்பனை செய்வது சிறந்தது.
பாதுகாப்பான முதலீடு
தொடர்ந்து விலை உயர்வு அடைய வாய்ப்புள்ளதால், முதலீட்டை தவிர்த்து குடும்ப தேவைக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் தாமதிக்காமல் வாங்குவது பொருத்தமாக இருக்கும். தங்கம் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாக திகழ்ந்து வந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் தங்க விலையில் 10-15% கூடுதல் உயர்வு ஏற்படும் என பல்வேறு சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, தங்கம் வாங்க விரும்புவோர் படிப்படியாக (Systematic Buying) வாங்குவதுதான் சிறந்தது. உலகளாவிய பொருளாதார நிலவரங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், தங்கம் முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையைத் தரும் என கூறலாம்.












Click it and Unblock the Notifications