Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படக்குனு 10 கிராம் வாங்குங்க.. தடதடக்க போகும் தங்க மார்க்கெட்! ஆர்பிஐ கவர்னர் கொடுத்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. நேற்று காலை தங்கத்தின் விலை குறைந்த நிலையில் மாலையே திடீரென உயர்ந்தது. இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என்ன என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை மீண்டும் ஒருமுறை சாதனை அளவிற்கு உயர்ந்துள்ளது. தினமும் புதிய உச்சியைத் தொட்டுக்கொண்டே வரும் தங்கத்தின் விலை, நகை வாங்கும் பொதுமக்களையும் முதலீட்டாளர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தங்க விலை தொடர்ச்சியாக உயர்வை நோக்கி நகர்ந்து வருவது பொருளாதார நிபுணர்களைக்கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.87,200 ஆக இருந்தது.

Gold Price

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் ரூ.400 உயர்ந்து சவரனுக்கு ரூ.87,600 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.50 அதிகரித்து ரூ.10,950 ஆக உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பலரும் தற்போது, விலை குறையும் வரை காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,150, ஒரு சவரன் ரூ.57,200 என விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் மட்டும் தங்க விலையில் பெரிய மாற்றம் பதிவாகியுள்ளது.

தங்கம் விலை

காலை வேளையில் ஒரு கிராமுக்கு ரூ.110 வரை குறைந்திருந்த விலை, மாலை வேளையில் மீண்டும் ரூ.60 உயர்ந்தது. இதனால் மொத்தத்தில் ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்தாலும், இன்று மீண்டும் அதைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.162 இருந்த வெள்ளி இன்று ரூ.165 ஆக உயர்ந்துள்ளதால், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,65,000 ஆகவும் உள்ளது.

உலக பொருளாதார தாக்கம்

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றம், பொருளாதார மந்தநிலை, மற்றும் உலக நாடுகளில் மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் தங்கச் சேமிப்பு கொள்கைகள் ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க வழிவகுத்துள்ளன. மேலும், அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் வரியைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, அவரது பொருளாதார முடிவுகள் மீதான உறுதியின்மை போன்றவை முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களுக்குத் திருப்பி விட்டுள்ளன.

சஞ்சய் மல்ஹோத்ரா கருத்து

இதனால் தங்கத்தின் விலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, மக்கள் "இப்போதே நகை வாங்கலாமா?" அல்லது "இன்னும் காத்திருக்கலாமா?" எனக் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: "கடந்த காலங்களில் புவியியல் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை எவ்வாறு மாறியதோ அதேபோல தற்போது தங்கத்தின் விலையும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டு குழப்பம்

இதனால் தங்க விலை இன்னும் சில வாரங்களில் கூடுதல் உயர்வை அடையக்கூடும் என்பதே பொருளாதார வட்டாரங்களின் மதிப்பீடு. அதனால் தங்க முதலீட்டில் ஈடுபடுவோர் தற்போதைய நிலையை கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+