Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாட்டி காலத்தில் 1 சவரன் தங்கம் ரூ.50...அம்மா காலத்தில் ரு.500.. நம் காலத்தில் 1 கிராம் ரூ.5055

பாட்டி காலத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் 50 ரூபாய்க்கு விற்பனையானது இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.5055ஆக விற்பனையாகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. பாட்டி காலத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் 50 ரூபாய்க்கு விற்பனையானது இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.5055ஆக விற்பனையாகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் 12ஆவது நாளாக தொடர்ந்து வருவதால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,433 புள்ளிகள் சரிந்து 52,890 ஆக வர்த்தகமாகின. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 430 புள்ளிகள் சரிந்து 15,815 ஆகவும் வர்த்தகமாகின.

இந்நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 85 ரூபாய் உயர்ந்து, ரூ.5055க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40440 க்கு விற்பனையாகிறது. இதனால், திருமணங்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 கிராம் தங்கத்தின் வருடாந்திர சராசரி விலை அளவுகள் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் படி 1964ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 63.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 2020ஆம் ஆண்டில் 48,651 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பாட்டி காலத்தில் தங்கம் விலை 1964 முதல்

பாட்டி காலத்தில் தங்கம் விலை 1964 முதல்

நம்முடைய பாட்டி காலத்தில் 1964ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 63.25 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டது. 1965ஆம் ஆண்டு - 71.75 ரூபாய் 1966ஆம் ஆண்டு - 83.75 ரூபாய் 1967ஆம் ஆண்டு - 102.50 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது தங்கம். 1967 ஆம் ஆண்டில் ஒரு சவரன் 80 ரூபாய்தான்.

அம்மா காலத்தில் தங்கம் ஒரு சவரன்

அம்மா காலத்தில் தங்கம் ஒரு சவரன்

1976ஆம் ஆண்டு அதாவது நம்முடைய அம்மா திருமணம் செய்த காலத்தில் ஒரு கிராம் 43ரூபாய் ஆகவும் 10 கிராம் 432.00 ரூபாய் விற்பனையானது. படிப்படியாக உயர்ந்து 1979ஆம் ஆண்டு 937.00 ரூபாய் ஆகவும் 1980ஆம் ஆண்டு 1,330.00 ரூபாய் ஆகவும் விற்பனையானது. 1985ஆம் ஆண்டு 10 கிராம் 2,130.00 ரூபாய் ஆக உயர்ந்தது. 1988ஆம் ஆண்டு ஒரு கிராம் 3,13 ரூபாய் ஆக விற்பனையானது.

 நம்முடைய காலத்தில்

நம்முடைய காலத்தில்

1992ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 4,334.00 ரூபாய் ஆக உயர்ந்தது. 1996ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 5,160.00 ரூபாய் ஆக விற்பனையானது. 2005ஆம் ஆண்டு 10 கிராம் 7,000.00 ரூபாய் ஆக விற்பனையானது. 2007ஆம் ஆண்டு ஒரு கிராம் 1080 ஆகவும் பத்து கிராம் 10,800.00 ரூபாய் ஆகவும் விற்பனையானது. 2011ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 26,400.00 ரூபாய் ஆக உயர்ந்தது.

நம்பிள்ளைகள் காலத்தில்

நம்பிள்ளைகள் காலத்தில்

2012ஆம் ஆண்டு சட்டென்று உயர்ந்தது. 10 கிராம் தங்கம் 31,050.00 ரூபாய் ஆக அதிகரித்தது. 2019ஆம் ஆண்டு 35,220.00 ரூபாய் ஆகவும் 2020ஆம் ஆண்டு 48,651.00 ரூபாய் ஆகவும் தங்கம் விலை அதிகரித்தது. இன்றைய தினம் தங்கம் ஒரு கிராம் தங்கம் 5055 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 40440 ஆகவும் 10 கிராம் தங்கம் 50550 ஆக உயர்ந்துள்ளது.

எட்டாகனியாகும் தங்கம்

எட்டாகனியாகும் தங்கம்

இந்திய பெண்களுக்கு தங்கம் என்பது மிகப்பெரிய முதலீடு. சிறுக சிறுக சேர்த்து கிராம் கிராமாக வாங்குவார்கள். ஒரு சவரன் எடுக்கவே ஓராண்டு சேமிப்பார்கள் நடுத்தர குடும்பத்து பெண்கள். இப்போது தங்கம் விலை தாறு மாறாக உயர்ந்து வருவதால் அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+