"தங்கம் விலை நிச்சயம் ரூ.8000 வரை செல்லும்.." புது குண்டை போட்ட ஆனந்த் சீனிவாசன்.. ஆஹா நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

கொரோனாவுக்கு பிறகு எகிறத் தொடங்கிய தங்கம் விலை இடையில் சில காலம் சற்று குறைந்தது. இந்தச் சூழலில் தங்கம் விலை மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

Gold price will go upto 8000 Rs in within a year says Expert Anand Srinivasan

தங்கம் விலை மீண்டும் இப்படி அதிகரிக்க என்ன காரணம்.. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி இருக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்: இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில், "தங்கம் விலை இப்போது ஒரு கிராம் ரூ. 6200ஐ தாண்டி விட்டது. ஜிஎஸ்டி சேர்த்தால் ரூ. 6500க்கு அருகே வந்துவிட்டது. செய்கூலி, சேதாரத்தை எல்லாம் சேர்த்தால் தங்கம் விலை மேலும் அதிகமாகவே இருக்கும். கடந்த 2019இல் நான் தங்கம் குறித்து முதலில் பேசும் போது அதன் விலை ரூ. 3,200 என்ற ரேஞ்சில் தான் இருந்தது.

இப்போது அதன் விலை ரூ.6200ஐ தாண்டிவிட்டது. CAGRஐ பார்த்தால் 15 சதவிகிதம் நமக்கு லாபம். தொடர்ச்சியாகத் தங்கத்தை நீங்கள் வாங்கி இருந்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நானே இந்தளவுக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாட்டில் விலைவாசி எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ரூபாய் மதிப்பு குறைந்து இருப்பதையே இது காட்டுகிறது.

33 லட்சம் லாபம்: என்னிடம் 2019இல் ஒரு 1000 கிராம் இருந்தது என வைத்துக் கொள்வோம். நான் லாக்கரில் வைத்து இருந்தாலே எனக்கு ஒரு கிராமுக்கு சுமார் ரூ.3000 லாபம். நான் எதுவும் செய்யாமலேயே எனக்கு ஐந்து ஆண்டுகளில் 33 லட்ச ரூபாய் லாபமாகக் கிடைத்துள்ளது. இதிலும் கூட நான் தங்கத்தை விற்றால் மட்டுமே 33 லட்ச ரூபாய்க்கு வரி போடுவார்கள். இல்லையென்றால் அதற்கும் வரி கிடையாது.

இன்னும் அமெரிக்காவில் வட்டி விகிதத்தைக் குறைக்கவே இல்லை. அதற்கு முன்பே இப்போது இந்த நிலைமை தான் நிலவுகிறது. அமெரிக்க மத்திய வங்கி கவர்னர் நிச்சயம் வட்டி விகிதத்தைக் குறைப்போம் எனப் பேசி வருகிறார். வேலையிழப்பு அதிகரித்தால் விலைவாசி கட்டுக்குள் வரவில்லை என்றாலும் வட்டி விகிதத்தைக் குறைப்போம் என்கிறார். அப்படி அவர்கள் வட்டி விகிதத்தைக் குறைத்தால் அது தங்கத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ரூ. 8000ஐ தொடும்: ஓராண்டில் மட்டும் தங்கம் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும். 2025ஆம் ஆண்டுக்குள் தங்கம் ஒரு கிராம் 7500- 8000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருக்கு. அமெரிக்க ரிசர்வ் வங்கி இந்தாண்டு மூன்று முறையும் அடுத்தாண்டு நான்கு முறையும் வட்டி விகிதத்தைக் குறைத்தால் மொத்தம் 1.75% வரை வட்டி விகிதம் குறைந்து இருக்கும். அப்போது தங்கம் விலை உடனடியாக அதிகரிக்கும்.

இந்தியாவில் தங்கம் இல்லை. நாம் இறக்குமதி தான் செய்து கொண்டு இருக்கிறோம். எனவே, இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் நிலையில், தங்கத்தின் விலையை அது மேலும் அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 90க்கு சரிந்துவிட்டால், தங்கம் விலை சற்று உயர்ந்தாலும் அசால்டாக ரூ.8000 தாண்டிவிடும்.

காரம்: அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இப்போது ரூ,83ஆக இருக்கிறது. இது அடுத்த 18 மாதங்களில் ரூ.86 வரை நிச்சயம் செல்லும். அவ்வளவு ஏன் ரூ.90 வரை கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நான் கண்டிப்பாகச் செல்லும் எனச் சொல்லவில்லை. இருந்தாலும் தங்கம் விலை வரும் காலங்களில் நல்ல ஏற்றத்தைச் சந்திக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+