இன்றைய தங்கம் விலை நிலவரம்.. எந்த ஏரியாவில் என்ன விலை? சென்னை, மதுரை, கோவை, திருச்சி நிலவரம்!
சென்னை: சென்னையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,710 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ₹ 7,310 ஆகவும் உள்ளது (இது 999 தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது). நேற்று முதல் நாளை விட 50 ரூபாய் விலை கூடி தங்கம் விலை விற்கப்படுகிறது.
இன்று தங்கம் விலை: கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 2.10% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் தங்கம் 3.50% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.844.6 ஆக உள்ளது. இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 20 அன்று 10 கிராமுக்கு ரூ.71,810 ஆக உள்ளது. கிராம் ஒன்றின் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,641 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,900 ஆக இருந்தது.

சென்னையில் தங்கம் விலை - ஆகஸ்ட் 20 காலை 10 மணி நிலவரப்படி:
சென்னையில் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 19 ஆம் தேதி 10 கிராம் ரூ.71,610 ஆக உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.70,350 கிராம் ஆகவும், கடந்த வாரம் ஆகஸ்ட் 12ஆம் தேதி 10 கிராம் ரூ.70,920 ஆகவும் இருந்தது. அதோடு ஒப்பிட்டால் 10 கிராம் தங்கத்திற்கு 1300 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளது.
மற்ற நகரங்கள்: மதுரையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,759 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,446 ஆகவும் உள்ளது.
கோவையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,879 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,545 ஆகவும் உள்ளது.
திருச்சியில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,815 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,566 ஆகவும் உள்ளது.
தங்கம் உச்சம் தொடும்: 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும்.. அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2030ல் விலை உச்சம் அடையும்: 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார்.
சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
வடகொரியா - தென் கொரியா போர் , உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - ஈரான் போர் போன்ற போர்கள் தற்போது நடக்கின்றன. பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலதும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில்தான் மத்திய வங்கியின் அதிக அளவிலான தங்க கொள்முதல், பணவீக்க அழுத்தங்கள், அதிகரித்த சில்லறை தேவை, பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் மூலம் அதிகரித்த வட்டி, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கு பங்களித்துள்ளன.
இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும். அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும். தங்கத்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இதன் மூலம் 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் 86 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை எட்டலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்படி உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, தங்கத்தின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications