கோல்டன் மார்க்கை.. தாண்டி தங்கம் படைத்த சாதனை.. அடுத்து நடக்க போகும் ஷாக் சம்பவம்.. கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சர்வதேச அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,000 டாலர்களைத் (கோல்டன் மார்க்) தாண்டி வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தின் விலை 0.7 சதவீதம் அதிகரித்து 4,011.18 டாலராக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்கத் தங்க வர்த்தகம் 0.7 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,033.40 டாலராக இருந்தது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை, டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் போன்ற பல காரணங்களால் இந்த ஆண்டு தங்கம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விளைவாக, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

gold rate silver investment

தங்கம் விலை உயர்வு

அக்டோபர் மாதத்தில், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்க அரசு முடக்கம் குறித்த அச்சங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நாடினர். கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க அரசு முடங்கியதால், தங்கத்தின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருகிறது.

அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அதிகாரப்பூர்வமாக முடங்கியது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, செனட் அவை அங்கு தற்காலிக நிதியுதவி மசோதாவை அங்கீகரிக்கத் தவறியது. இதனால் தற்போது அங்கு அரசு முடங்கி உள்ளது. இதனால் டாலரின் மதிப்பு சரிந்தது, இதன் விளைவாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உலக அரசியல் சிக்கல்ல்

ஜப்பானின் தற்போதைய நிலையும் அவ்வளவு சாதகமாக இல்லை. அங்கும் அரசியல் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இது போக பிரான்சில் ஏற்பட்ட அரசியல் குழப்பம், பிரதமர் ராஜினாமா செய்து முன்கூட்டியே தேர்தல் நடத்த வலியுறுத்தியது போன்ற உலக அரசியல் பிரச்சனைகளும் தங்கத்தின் கவர்ச்சியை மேலும் அதிகரித்தன.

நிச்சயமற்ற காலங்களில் நம்பகமான முதலீடாகக் கருதப்படும் தங்கம், இன்று ஒரு அவுன்ஸ் 4,006.68 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது.

தங்கம் சரியும்

ஆனால் இந்த அரசியல் பிரச்சனைகள் நீண்ட கால பிரச்சனைகள் கிடையாது. இந்த பிரச்சனைகள் அடுத்த 3-4 வாரங்களில் சரியாகும். அப்படி சரியாகும் பட்சத்தில் இந்த bubble உடையும். தங்கத்தின் விலை சரியும். அதாவது இப்போது ஏற்பட்டு உள்ள ஏற்றம்.. நீடித்து இருக்காது. வேகமாக சரியும்.

அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை 2-3 சதவிகிதம் சரியும். இப்போது இருக்கும் அதே உச்சம் நீடிக்காது. விலை சரியும். அதை பயன்படுத்திக்கொண்டு தங்கம் வாங்குவது நல்ல வாய்ப்பாக இருக்கும். 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் உயர்ந்த பிறகு, நடப்பு ஆண்டில் தங்கம் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் இப்படியே உச்சமாக தங்கம் விலை இருக்காது. அது course correction ஆகும். இதன் மூலம் அதிக அளவில் தங்கம் சரிவை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தங்க சந்தை அடுத்த பெரிய எண்ணிக்கையான 5,000 டாலர்களை நோக்கியே நகரும். ஆனால் அதற்கு முன் சிறிய சரிவு கண்டிப்பாக இருக்கும். நடப்பு தங்கம் 0.7 சதவீதம் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 4,011.18 டாலராக இருந்தது. டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்கத் தங்க எதிர்கால வர்த்தகம் 0.7 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,033.40 டாலராக இருந்தது. இது அடுத்த சில வாரங்களில் 2 சதவிகிதம் வரை சரியும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+