அடேங்கப்பா! புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. கடந்த 10 மாதங்களில் சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 360 அதிகரித்து, ரூ.57,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் முறையாக தங்கம் விலை சவரன் 57 ஆயிரத்தை கடந்துள்ளது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

gold rate gold chennai

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை சரிவது நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க எண்ணும் மக்கள், நகைப் பிரியர்கள், இல்லத்தரசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு ரூபாய் 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,140-க்கும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூபாய் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை முதல் முறையாக ஒரு சவரன் ரூபாய் 57 ஆயிரத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 22 காரட் ஆபரண தங்கம் விலை 47 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது 57 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதாவது, கடந்த 10 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 10,000 ரூபாய் உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+