தங்கத்துக்கு ஏறும் மவுசு.. வளர்ந்த நாடுகளின் சூழ்ச்சி! தங்க நகை விலை எப்போது குறையும்: பிரபலம்
சென்னை: நூற்றுக்கணக்கான வருடங்களாக வளரும் நாடுகளுக்கு கீழேயே நாம் இன்னமும் இருக்கிறோம்.. தங்கம்தான் தங்களை காப்பாற்றும் பொருள் என்று நம்முடைய நடுத்தர மக்களும் நம்புகிறார்கள்.. தங்கம் இல்லாவிட்டால் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக நினைக்கிறார்கள்.. இன்று ஏறியிருக்கும் தங்கம் விலையையும் நம்முடைய மக்கள் ஏற்க பழகி கொண்டால், இனி தங்கம் விலை குறைய வாய்ப்புகள் குறைவுதான் என்று கருத்து கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், நான் ஒருமுறை ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா நாட்டுக்கு சென்றிருந்தேன். லுசாக்கா என்பது அந்நாட்டின் தலைநகரம்..

சீனா எதிர்புறத்தில் உள்ளது.. அதாவது பசிபிக் கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் இவைகளை தாண்டியே ஆப்பிரிக்கா உள்ளது.. அதாவது, குஜராத்திலிருந்து 2 மணி நேரத்தில் ஜாம்பியா போயிடலாம்..
சீன பொருட்கள் தயாரிப்பு
ஆனால், அங்கு சாலையில் ஓடுவது பூராவும் சீனா கார்கள்தான்.. நம்முடைய மாருதி கார்கள்தானே அங்கு ஓடவேண்டும்? பக்கத்திலேயே இருக்கும் நம்முடைய கார்கள் அங்கு காணப்படவில்லை.. இதற்கு காரணம் சீனாவின் மார்க்கெட்டிங் தான்.
இத்தனைக்கும் இந்திய தயாரிப்புகளைவிட, சீன பொருட்களின் தரம் மிகவும் குறைவானதுதான்.. அப்படியிருந்தும் அவர்கள் மார்க்கெட்டிங்கில் டாப்பில் உள்ளார்கள்.. இந்தியாவில் என்ன வளம் இல்லை? ஏன் இந்தியாவால் இதை செய்ய முடியவில்லை?
மார்க்கெட்டிங் குறைவு
இந்தியாவில் ஒரு வீட்டில் ஃபேன் வாங்கினால், அது வாழ்நாள் முழுவதும் ஓடிட்டே இருக்கிறது.. இன்னொரு ஃபேன் வாங்குவதற்கு வழியில்லை.. ஆனால், சீனா ஃபேன் 6 மாதத்தில் நின்றுவிடுகிறது.. இதனால் மற்றொரு ஃபேன் வாங்கும் சூழலை சீனாவே உருவாக்கி தருகிறது. நம்முடைய பொருட்களுக்கு மார்க்கெட்டிங் இல்லாமல் போவதற்கு இதுவே காரணம்.
தங்கம், வைரம்
அதுபோலவேதான் தங்கமும்.. இலக்கியங்கள், வரலாறுகளில் தங்கம் என்பது உள்ளது.. பிரமிடுக்குள்ளே தங்கத்தைதானே புதைத்து வைத்திருக்கிறார்கள்.. ராஜாக்கள் இறந்துபோனால், அந்த தங்கங்களையும் சேர்த்து உள்ளே வைத்துவிடுவார்கள்.. அதை கொள்ளையடிக்க போனவர்கள் பலர் உண்டு.. இன்றும்கூட பிரமிடுகளுக்குள் கொள்ளையடிக்க முயற்சிகள் நடக்கின்றன..
திருப்பதி கோயிலுக்கு அன்று பெயரென்ன? கிருஷ்ணதேவராயர் தந்த தங்கத்தையும், வைரத்தையும் யாரோ தூக்கி கொண்டு சென்றுவிட்டார்கள் என்றார்கள்.. சிதம்பரம் கோவிலில் வேயப்பட்ட தங்கக்கூரை இன்று பித்தளை கூரையாக உள்ளது.. தங்கம் அந்த அளவுக்கு இந்தியாவில் தாக்கத்தை உருவாக்கிவிட்டது.
வளர்ந்த நாடுகள் சூழ்ச்சி
உலகத்திலேயே நம்முடைய நாட்டில்தான் அதிக தங்கம் உள்ளது.. ஆனால், பெட்ரோல் விலை ஏறினால் தங்கம் விலையும் சேர்ந்து ஏறுவது போல கொண்டுவந்துவிட்டார்கள்.. இவைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.. .. ஏற்றுமதிக்கு அமெரிக்காவை விட்டால் இடமே இல்லை..
எந்த உற்பத்தி என்றாலும் அமெரிக்க மார்க்கெட்டையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.. இனிவரப்போகும் நாட்களில் தங்கம் விலை குறையுமா தெரியாது.. தங்கம் விலை உயர காரணமே, மற்ற நாடுகளையெல்லாம் தன்னுடைய பிடியில் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வளர்ந்த நாடுகள் செய்யும் சூழ்ச்சிதான் காரணம்.. தங்கத்தின் விலையை ஏற்றுவதும் இவர்கள்தான்..
தங்க நகைகள் விலை
நூற்றுக்கணக்கான வருடங்களாக வளரும் நாடுகளுக்கு கீழேயே நாம் இன்னமும் இருக்கிறோம்.. தங்கம்தான் தங்களை காப்பாற்றும் பொருள் என்று நம்முடைய நடுத்தர மக்களும் நம்புகிறார்கள்.. தங்கம் இல்லாவிட்டால் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக நினைக்கிறார்கள்.. இன்று ஏறியிருக்கும் தங்கம் விலையையும் நம்முடைய மக்கள் ஏற்க பழகி கொண்டால், இனி தங்கம் விலை குறைய வாய்ப்புகள் குறைவுதான்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications