18 மாதங்களில் தொழிற்சாலையை துவங்கனும்னு முதல்வர் சொன்னார்.. ஆனால்.. டாடா குழும தலைவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்
ராணிப்பேட்டை: நமது டாட்டா குழுமத்திற்கும், டாட்டார் மோட்டார் நிறுவனத்திற்கும் ஒரு பொன்னான நாள். என் அன்பான நன்றியை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கிறேன் என டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பேசினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின் முதல் பகுதியை திறந்து வைத்தார். இந்த ஆலை திறப்பு விழாவில் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தோளுக்கு தோள் கொடுக்கும் என சொன்னார்
இந்த நாள் நமது டாட்டா குழுமத்திற்கும், டாட்டார் மோட்டார் நிறுவனத்திற்கும் ஒரு பொன்னான நாள். 16 மாதங்களுக்கு முன்பே செப்டம்பர் 2024 தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இங்கு வந்தேன். அடிக்கல் நாட்டு விழா செய்ததற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அவர் உங்களுக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ எந்த மாதிரி தொழிற்சாலை கட்டுவதற்கு அப்ரூவல் வேண்டுமோ எனது அரசாங்கம் உங்களுடன் தோளுக்கு தோள் நின்று அனைத்தையும் செய்து கொடுக்கும்.
நீங்கள்18 மாதத்திலேயே தொழிற்சாலையை துவக்க வேண்டும் என்று ஒரு வாக்குறுதி கொடுத்து வேண்டுகோளும் விடுத்தார். இந்த 16 மாதங்களிலேயே தொழிற்சாலை சிறப்பான அளவிலே இங்கு எழுந்துள்ளது. தி ரேஞ்ச் ரோவர் எவோக் மாடல் முதலாவது வாகனமாக இங்கு தயாரிக்கப்பட்டு இந்த முதல் வாகனமானது முதல்வர் ஸ்டாலின் அவர்களால் ஓட்டப்பட்டு வெளியிடப்பட்டது.
வருஷத்திற்கு மூன்றரை லட்சம்
இதற்கு என் அன்பான நன்றியை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கிறேன். டாட்டா மோட்டார் ஜே.எல்.ஆர் தொழிற்சாலை அனைத்திலும் அட்வான்ஸ்டு லெவலில் செயல்படுத்தப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் 3 பேஸ் பிளானிங் செய்யப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை அனைத்து பேஸ் 1, 2, 3 செயல்படுத்தப்பட்டு வருடத்திற்கு இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும்.
ஜாக்குவார் லேண்ட்ரோவர் தொழிற்சாலைகள் லண்டன், ஆஸ்ட்ரியா, சீனா, பிரேசில் நாடுகளில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுடன் இந்தியாவும் ஜேஎல் ஆர் லேண்ட் ரோவர் தொழிற்சாலை மேம்பில் தமிழ்நாடும் பங்குபெறும். டாட்டா நிறுவனம் தமிழ்நாட்டிலே பெரிய அளவிற்கு தனது பிரசன்ஸை கிரியேட் செய்து இருக்கிறது.
டாட்டா பவர், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா கெமிக்கல்ஸ், இந்திய ஹோட்டல் தாஜ், டாட்டா எலக்ட்ரானிஸ், சோலார் தயாரிப்பு பெரிய அளவில் கோலோச்சுகிறது. தற்போது டாட்டார் மோட்டார்ஸ் அனைத்து நிறுவனங்களுடன் சேர்ந்து பெரிய வளர்ச்சியை கொடுக்கும். என்று கூறினார்.
நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்
இதனையடுத்து ஸ்டாலின் பேசுகையில், நம்முடைய அன்புக்குரிய திரு சந்திரசேகரன் அவர்கள் முதலில் உரையாற்றுகின்றபோது, இந்த நாள் டாடா குழுமத்திற்கு ஒரு பொன்னாள் என்று சொன்னார். டாடா நிறுவனத்திற்கும், இங்கு இருக்கக்கூடிய பணியாளர்களுக்கும் ஒரு பொன்னாள் என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு எடுத்துச் சொன்னார். உண்மை தான்.
ஆனால், ஒன்றை அவர் மறந்துவிட்டார்; எங்கள் தமிழ்நாட்டிற்கும் இது பொன்னாள். மன்னிக்கவும், நம்முடைய தமிழ்நாட்டிற்கும் இது பொன்னாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கும் இது ஒரு பொன்னாள். அந்த வகையில், சிப்காட் பனப்பாக்கத்தில், டாடா JLR நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைப்பதில், நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
டாடா குழுமம் தமிழ்நாடு மீது வைத்திருக்கும் நம்பிக்கை உள்ளபடியே பெருமையையும், மகிழ்ச்சியையும் நமக்கெல்லாம் அளிக்கிறது. அதுவும், 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகின்ற, இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் கோரிக்கை வைத்திருந்தேன்
டாடா குழுமத் தலைவர் திரு. சந்திரசேகரன் அவர்கள், இங்கு பங்கேற்றிருப்பது எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டுமல்ல, நம்முடைய தமிழ்நாட்டிற்கே அது மிகப் பெரிய பெருமை!
அவரே குறிப்பிட்டுச் சொன்னார். 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், "விரைந்து இந்தப் பணிகளை முடித்து திறப்பு விழாவிற்கும் நீங்கள் வர வேண்டும்" என்று மரியாதைக்குரிய சந்திரசேகரன் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்திருந்தேன். அதை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இன்று அவர் நம்மிடையே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதற்கு மகிழ்ச்சி! அதற்காக மீண்டும் என்னுடைய நன்றியை நான் அவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
தமிழ்நாட்டிற்கும் ஆழமான உறவு
இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். ஸ்டீல், I.T. ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள். ஹாஸ்பிட்டாலிட்டி, தொலைத்தொடர்பு... இப்படி, பல துறைகளில் தடம்பதித்து, மிகப் பெரிய சாதனைகளை படைத்திருக்கக்கூடிய நிறுவனம் தான் நம்முடைய டாடா குழுமம்!
உலக அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு குழுமமாக டாடா நிறுவனம் இருக்கிறது! டாடா என்று சொன்னாலே அதற்கு ஒரு பிராண்ட் வேல்யூ உண்டு! அப்படிப்பட்ட டாடா நிறுவனத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆழமான உறவும் இருக்கிறது. என்று ஸ்டாலின் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications