குட் நியூஸ்.. முதலமைச்சர் மாநில இளைஞர் விருது.. இதோ தங்கமான சான்ஸ்.. தமிழக அரசின் ரூல்ஸ் இதுதான்
சென்னை: முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த விருதினை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம்தேதி, சுதந்திர தினத்தன்று முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது... 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

சிறப்பு விருது: இந்த விருது, ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்... சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
விரைவில் சுதந்திர தினம் வருவதால், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு இதுதான்:
பெண்கள்: "சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ₹1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடஙக்கியதாகும்.
2024ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர் வரும் 15.8.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர்
விண்ணப்பிக்கலாம்.
நிதியாண்டு: 1.4.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023-24) அதாவது 1.4.2023 முதல் 31.03.24 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அவளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இணையதளம்: இணைதளம் மூலம் விண்ணப்பிக்க 1.5.2024 முதல் கடைசி நாள் 15.5.2024 அன்று மாலை 4 மணி ஆகும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான(www.sdat.tn.gov.in) உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84. அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசிஎண். 7401703480 (அல்லது) 044-26644794 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications