10.45 மணிக்கு.. அதுவும் உட்கார்ந்து கொண்டே.. விஜயதாரணியா இப்படி?.. அப்பாவு போட்ட போடு.. என்ன நடந்தது
விஜயதாரணிக்கு அப்பாவு அறிவுரை வழங்கினார்
சென்னை: காங்கிரஸ் பெண் எம்எல்ஏ விஜயதாரணிக்கு, சபாநாயகர் அப்பாவு சில அறிவுரைகளை நேற்றைய தினம் வழங்கியிருந்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடி நடந்து கொண்டிருக்கிறது.
முதல் நாளில், நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, நீர்வள துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசினார்.

கன்னியாகுமரி
அப்போது அவர் பேசியபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை வேண்டும் என்று கேட்டார்.. மேலும், ஜல்லி மண் போன்றவை லாரிகள் மூலம் பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு எடுத்து செல்லப்படுவதால், அவைகளின் விலை அதிகமாகிவிட்டது என்று வேதனை தெரிவித்தார். அத்துடன், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை திட்டத்தை திமுக அரசு கைவிடக் கூடாது என்றும், திருமண உதவி திட்டத்தை தொடரும் பட்சத்தில் திமுக அரசிற்கு நற்பெயர் கிடைக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மைக் ஆப்
இவ்வாறு விஜயதாரணி பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென அவருடைய மைக்கை ஆப் செய்துவிட்டனர்.. அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்துவிட்டதால், அவருக்கான மைக் ஆப் செய்யப்பட்டது. இதனால் விஜயதாரணிக்கு மறுபடியும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கடசி மட்டுமல்லாமல், அதிமுகவினரும் சேர்ந்து கோரிக்கை வைத்தனர். அதிமுக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே கோரிக்கை விடுக்கவும், துணை சபாநாயகரும் அதனை விஜயதாரணி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கினார்..

விஜயதாரணி
இந்த கூட்டத்தொடர் துவங்கியது முதலே இதுபோலவேதான், விஜயதாரணி விடாமல் கேள்விகளை எழுப்பி கொண்டும், கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தைவிடவும் பேசிக் கொண்டும் வருகிறார்.. நேற்றைய தினம் அப்பாவு இதை வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.. கேள்வி நேரத்தின்போது விஜயதரணி, தனக்கு துணை கேள்விக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டார். அதற்கு சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு வழங்கவில்லை.

மூலக்கேள்வி
தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்துகொண்டே விஜயதாரணி இவ்வாறு வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தார்... இதை கண்ட சபாநாயகர் அப்பாவு,''விஜயதரணி, ஏற்கனவே நான்கு துணை கேள்விகள் கேட்டு விட்டார்.. ஆனால், ஒரு கேள்வி கூடஒரு மூலக்கேள்வி கூட கேட்காமல் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்.. அவர்களை பார்த்து பார்த்து வாய்ப்பு வழங்குகிறேன்..

10.45 = சிரிப்பலை
இருந்தாலும், நீங்க ஒரு மூத்த உறுப்பினர்... இப்படி உட்கார்ந்து பேசுவது நல்ல பழக்கம் கிடையாது.. விதிகளை பின்பற்றுங்கள். காலை 10:45 மணிக்கு தான் வருகிறீர்கள்.. வந்ததுமே கேள்வி கேட்கிறீர்கள்" என்றார்... சபாநாயகர் அப்பாவு இப்படி சொன்னதுமே சட்டசபையே சிரித்துவிட்டது.. சபாநாயகர் சொன்னதற்கு பதில் அளிக்க விஜயதரணி மறுபடியும் வாய்ப்பு கேட்டார், ஆனால் மறுபடியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications