அரசு அதிரடி.. இன்று மொஹரம் பண்டிகையொட்டி பொது விடுமுறை.. பள்ளி, கல்லூரிகளுக்கும் லீவு..!
இன்று இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்
சென்னை: நாடு முழுவதும் மொகரம் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.. இந்த பண்டிகையையொட்டி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் 12 மாதங்கள் குறிப்பிடப்படுவதை போல, இஸ்லாமிய ஆண்டு நாட்காட்டியின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்...

புனித மாதம்
முஹமது நபி (ஸல்) அவர்களும், தீர்க்கதரிசிகளும், மற்ற தூதர்களும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படு கிறது. எனினும், ஷீஆ முஸ்லிம்கள் இதனைத் துக்கமான மாதம் என்கின்றனர்... இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் புனித மாதம்' என்று அழைத்தார் என்று கூறப்படுவதும் உண்டு.

பள்ளிவாசல்கள்
அன்றைய தினம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடுவார்கள்.. அந்த வகையில், இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 9ம் தேதி அதாவது இன்றைய தினம் கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் ஹாஜி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. எனவே, இந்த பண்டிகையையொட்டி, தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை
இதற்கு பதில் வரும் 20 ம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதேபோல, குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. அதன்படி, மொஹரம் பண்டிகையான இன்றும் பங்குச் சந்தைகள் இயங்காது. இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை முதல் பங்கு சந்தைகள் வழக்கம் செயல்படும்.

தொழுகைகள்
இதனிடையே, நாடு முழுவதும் இன்று மொகரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இஸ்லாமிய சகோதர - சகோதரிகள், புத்தாடைகளை அணிந்து, உறவினர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை சமைத்து கொடுத்தும் வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications