Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படி போடு.. மாற்று திறனாளிகள் அரசு பஸ்ஸில் "வீல் சேருடன்" பயணிக்க உதவ வேண்டும்.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாழ்தள பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும்போது அவர்களுக்கு உதவுவது குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அறிவுறுத்தியே வருகிறது.

government bus

மாணவர்கள்: அதிலும், மாணவர்களின் நலனில் பெரும் அக்கறையை போக்குவரத்து துறை முன்னெடுத்து வருதால், அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் அடிக்கடி வழங்கி வருகிறது.

குறிப்பாக, அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும், அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தி வருகிறது.

மாற்றுத் திறனாளிகள்: இதுபோலவே, மாற்றுத்திறனாளிகளின் நலனில் தொடர்ந்து அக்கறை எடுத்து வருகிறது தமிழக அரசு.. கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட ஒரு அறிவுறுத்தலை டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வழங்கியிருந்தது.. அதில், மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.. மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது.

மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும், ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.. மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தது.

புதிய அறிவுரை: இந்நிலையில், புதிய அறிவுரையை டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வழங்கியிருக்கிறது. அதாவது, தாழ்தள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உதவ வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மண்டல மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கை:

தாழ்தள பேருந்துகள்: "மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும்போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உதவ வேண்டும்.

பேருந்தில் அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலி அங்கும், இங்கும் நகராத வகையில், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவா்கள் சக்கர நாற்காலிகளை பேருந்தில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் 'லாக்' செய்ய நடத்துநா்கள் உதவ வேண்டும்.

சக்கர நாற்காலி: அதேபோல, மாற்றுத்திறனாளிகள் இறங்கும்போது சாய்தள படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பேருந்தில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறவும், இறங்கவும் எவ்வித புகாரும் வராத வண்ணம் ஓட்டுநா், நடத்துநா்கள் பணியாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் எளிதில் பயணம் செய்ய வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பின்பற்ற மண்டல மேலாளா்கள், கிளை மேலாளா்கள் அறிவுறுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள்: ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இன்று பிறப்பித்திருக்கும் அறிவிப்பானது, மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+