"நம்பர் 1".. உலகிலேயே முதல்முறையாக..அதுவும் நம்ம தேனியிலேயே.. அட "நெல்லு மூட்டை".. சபாஷ் மத்திய அரசு
சென்னை: இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே.. அசத்தலான காரியத்தை மத்திய அரசு செய்துள்ளது.. இதனால் தமிழகத்தின் பெருமை தேசிய அளவில் உயருகிறது. என்ன தெரியுமா?
இந்திய உணவுக்கழகமானது, விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது.. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது..
வீணா போச்சே: ஆனால், பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லை.. இதனால், தானியங்கள் திறந்த வெளியிலேயே வைக்கப்படுகின்றன. இப்படி திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுவதால், அவைகள் மழையின்போது, நனைந்து வீணாகிவிடுகின்றன.. இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலைமைதான்.
பாடுபட்டு உழைத்த நெல் மூட்டைகள் வீணாகிவிடுவதால், விவசாயிகள் பெருத்த துயருற்றனர்.. விவசாயிகள் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், 14.50 கோடி டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகளே உள்ளன. நெல் மூட்டைகளை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை என்பதாலேயே பெருத்த நஷ்டமும் ஏற்பட்டு வருகின்றன.
சேமிப்பு கிடங்குகள்: இதை தடுக்கவே, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காகவே, மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளதாக அறிவித்தது.. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதிக்கும், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஒப்புதல் தந்திருந்தது..

வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில், இதற்கான நிதி, வேளாண் உள்கட்டமைப்பு நிதியம், வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்ககலை வளர்ச்சி இயக்கம், பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
தேனி மாவட்டம்: முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதாம்.. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.
இப்படி, ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்... தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
நிறைய லாபம்: மேலும் விளை பொருட்களுக்கும் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள், உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.. அத்துடன், தானியங்கள் வீணாவதும் தடுக்கப்படும்.. இந்திய உணவு கழகத்தின் சுமையும் குறையும்... விவசாயிகளுக்கும் போக்குவரத்து செலவும் குறைந்து, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
உலக கவனம்: உலகிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சேமிப்பு கிடங்குகள் கட்ட, மத்திய கூட்டுறவு அமைச்சகம் திட்டமிட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications