Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் கனவு இல்லம் திட்டம்: 7 லட்சம் வீட்டை கட்டும் அரசு! சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கோல்டன் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகக் கிராமப்புறங்களின் தலையெழுத்தை மாற்றி வருகிறது கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. இந்த திட்டத்தின் கீழ் நேற்றையதினம் தமிழக முதல்வர் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இது கிராமப்புற மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்த திட்டத்தின் பலனை பெற என்ன செய்ய வேண்டும்? தகுதிகள், விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

தமிழகத்தின் குக்கிராமங்களில் இன்றும் ஓலை வீடுகளிலும், பாதுகாப்பற்ற குடிசைகளிலும் வசித்து வரும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு "கலைஞர் கனவு இல்லம்" என்ற உன்னதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

Kalaignar Kanavu Illam Scheme CM Stalin Tamil Nadu Housing Scheme Free House Scheme Kalaignar Dream Home Scheme Tamil Nadu Government

கலைஞர் கனவு இல்லம்

ஏழை எளிய மக்களின் நீண்ட காலக் கனவான சொந்தக் கான்கிரீட் வீடு என்பதை நனவாக்கும் இந்தத் திட்டம், ஊரகப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த கூடுதல் அறிவிப்பு கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது..

ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு

இந்நிலையில், நேற்றைய தினம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை வெளியிட்டார்.. அதில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றிய அவரது அறிவிப்புகளில், 2030ம் ஆண்டுக்குள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் சில குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும், கிராமப்புறங்களில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

பாதுகாப்பான குடியிருப்பு இல்லாதவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

புறம்போக்கு நிலங்கள்

அதே வேளையில், ஏற்கனவே கான்கிரீட் வீடுகள் வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் வகுக்கப்பட்ட விதியாகும்.

நிதியுதவியைப் பொறுத்தவரை, ஒரு வீடு கட்டுவதற்கு அரசு தரப்பிலிருந்து 3,50,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தப் பெருந்தொகையானது கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து 3 தவணைகளாக நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது...

கனவு இல்லம் - பயன்கள்

இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் நிதி முழுமையாகப் பயனாளிகளுக்கு சென்றடைகிறது. மேலும், கட்டுமானத்திற்குத் தேவையான கூடுதல் நிதி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் 1,50,000 ரூபாய் வரை கடன் வசதி பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது...

பயனாளிகளின் சுமையை குறைக்க தமிழக அரசின் டான்செம் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் சிமெண்ட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் தரமான இரும்புக் கம்பிகள் வழங்கப்படுவதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

கட்டுமானத்தின் தரம் மற்றும் வடிவமைப்பில் அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைய வேண்டும்.

விதிமுறைகள் என்னென்ன

இதில் 300 சதுர அடி பரப்பளவு கட்டாயம் ஆர்சிசி கூரையுடன் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. பயனாளிகள் செங்கல் அல்லது நவீன ஏஏசி பிளாக் கற்களைப் பயன்படுத்தித் தங்களுக்குப் பிடித்தமான முறையில் மீதமுள்ள பகுதியை அமைத்துக்கொள்ளலாம்.

பயனாளிகள் தேர்வு முறையும் மிகவும் வெளிப்படையானது. ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையிலான குழுவினர் விண்ணப்பங்களை நேரில் ஆய்வு செய்து, கிராம சபையின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தகுதியுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் பட்டா, சிட்டா, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து, தங்கள் சொந்த வீட்டுப் கனவை நனவாக்கிக் கொள்ளலாம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+