குட் நியூஸ் தந்த தமிழக அரசு.. 2 மடங்கு வேகம்! சென்னை டூ கன்னியாகுமரி வரை ரேஷன் கடைகளில் செம மாற்றம்
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில், திராவிட மாடல் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி, குட்நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது ரேஷன்தாரர்களுக்கு புதிய நம்பிக்கையை தந்து வருகிறது..
குடும்ப அட்டைதாரர்களின் வசதியையும், நன்மையையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு அதை செயல்படுத்தியும் வருகிறது..

தாயுமானவர் திட்டம்
அந்தவகையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுமார் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேஷன் கார்டுகளை சேர்ந்த 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம், ரேஷன் கடைகளுக்கு வர இயலாத முதியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதாகும்.
உதவித்தொகை
இதுமட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களின் கல்வியை உறுதி செய்ய பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த மாதம் அமைச்சர் சக்கரபாணி அரசு விழா ஒன்றில் பேசும்போது, இனி புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவை பயனாளிகளின் கைகளுக்குக் கிடைக்கும் என்று உறுதி தந்தார்..
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்கவே இந்த 15 நாள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விரைவாகப் பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு உடனடியாக அட்டை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், வேகத்தையும் உறுதி செய்கிறது.
இதைத்தவிர, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த ரேஷன் கார்டு தொடர்பான அறிவிப்பு அரசின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசு பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணியில் உள்ளது.
தமிழக அரசு குட் நியூஸ்
இந்நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்துடன் தற்போதைய திமுக ஆட்சியை ஒப்பிட்டு அமைச்சர் சக்கரபாணி மிக முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.. அதில், திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே 58 மாதத்தில் 3400 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் வெறும் 2536 ரேசன் கடைகளே திறக்கப்பட்டன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. எனினும், தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடக்க போகும் நிலையில், திமுகவினர் தங்களுடைய தன்னுடைய ஆட்சி சாதனைகளை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.. அந்தவகையில் திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே 58 மாதத்தில் 3400 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டு அதை ஷேர்செய்து வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications